Morning News Today: சென்னையில் ரூ.1000-ஐ தாண்டிய சிலிண்டர் விலை; பொது மக்கள் வேதனை

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1,015 -க்கு விற்கப்படுகிறது. வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.2,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் வேதனையடைந்திருக்கின்றனர்.
கேஸ் சிலிண்டர்
கேஸ் சிலிண்டர்Twitter
Published on

சென்னையில் சிலிண்டர் விலை ரூ.1000-ஐ தாண்டியது!

சென்னையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ. 965-க்கு விற்பனை செய்யப்பட்டுவந்தது.இந்நிலையில், சிலிண்டர் விலையை இன்று மேலும் ரூ. 50 உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனால், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1,015 -க்கு விற்கப்படுகிறது. வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.2,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் வேதனையடைந்திருக்கின்றனர்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமிTwitter

தமிழகச் சட்டமன்ற நிகழ்வு: காவல்துறை மீது கொலை வழக்குப் பதிவு!

தமிழகச் சட்டமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சென்னையில், காவல்துறை விசாரணையின்போது விக்னேஷ் என்பவர் மரணம் அடைந்தது குறித்துக் கேள்வி எழுப்பினார். அப்போது அதற்குப் பதிலளித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், " தற்போது கிடைத்துள்ள விக்னேஷ் பிரேதப் பரிசோதனை முடிவுகளின்படி, அவருடைய உடலில் 13 இடங்களில் காயங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையிலே சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில், இன்றைக்கு இந்த வழக்கானது, கொலை வழக்காக மாற்றப்பட்டிருக்கிறது. காவலர்கள் மீது கொலை வழக்குப் பதியப்பட்டிருக்கிறது. விசாரணையைத் தொடர்ந்து நடத்திட சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது." என்றார்.

வடக்கு பிராந்திய ராணுவ தளபதி உபேந்திரா திவிவேதி!
வடக்கு பிராந்திய ராணுவ தளபதி உபேந்திரா திவிவேதி!Twitter

எல்லைக்கு அப்பால் தீவிரவாதிகள் தயார் நிலை - வடக்கு பிராந்திய ராணுவ தளபதி உபேந்திரா திவிவேதி!

காஷ்மீரின் உத்தம்பூர் நகரில் நேற்றைய தினம் செய்தியாளர்களைச் சந்தித்தார் வடக்கு பிராந்திய ராணுவ தளபதி உபேந்திரா திவிவேதி. அப்போது பேசிய அவர், " காஷ்மீரில் தற்போது 40 முதல் 50 உள்ளூர் பயங்கரவாதிகள் உள்ளனர். வெளிநாட்டுப் பயங்கரவாதிகள் எண்ணிக்கை தெரியவில்லை. இந்த வருடத்தில், இதுவரை 21 வெளிநாட்டுப் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்" என்றார். மேலும், பெரிய அளவிலான 6 பயங்கரவாத முகாம்களும், சிறிய அளவிலான 29 பயங்கரவாத முகாம்களும் செயல்பட்டு வருகின்றன. பாகிஸ்தான் ராணுவமே இந்த பயங்கரவாத கட்டமைப்புகள் நீடிப்பதற்குக் காரணம் என்பதை மறுக்கமுடியாது. காஷ்மீருக்குள் ஊடுருவ தயார்நிலையில் 200 பயங்கரவாதிகள் உள்ளனர். ஊடுருவலைத் தடுக்கும் நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன." என்றார்

இம்ரான் கான்
இம்ரான் கான் twitter

இம்ரான் கான் சொத்துகளை ஆய்வு செய்ய ஷெரிப் அரசு முடிவு!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசுக்கு எதிராக பாக். நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது நடந்த வாக்கெடுப்பின் முடிவில், இம்ரான் கான் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரிப் போட்டியின்றித் தேர்வானார். இந்நிலையில், இம்ரான் கானின் சொத்துகள், வருவாய் பற்றி ஆய்வு செய்ய ஷெபாஸ் ஷெரிப் தலைமையிலான அரசு முடிவு செய்திருக்கிறது. இம்ரான் கானின் சர்வதேச வங்கிக் கணக்கு விவரங்களைக் கேட்டுப் பெறுவதற்காகச் சர்வதேச நிதி அமைப்புகளுக்குக் கடிதம் எழுதவும் ஷெரிப் அரசு முடிவு செய்திருக்கிறது.

நிலக்கரி சுரங்கங்கள்
நிலக்கரி சுரங்கங்கள் Twitter

மூடப்பட்டிருந்த 20 நிலக்கரி சுரங்கங்கள் திறப்பு!

நாடு முழுவதும் மின்சாரத் தேவை இதுவரை இல்லாத வகையில் அதிகரித்திருக்கிறது. இதற்கா மின்சாரம் உற்பத்தி செய்ய நிலக்கரி தட்டுப்பாடு நிலவுகிறது. இதனை சரிசெய்ய ஏற்கெனவே மூடப்பட்டிருந்த அல்லது உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்த நிலக்கரி சுரங்கங்களை மீண்டும் திறக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்கென நிலக்கரி இந்தியா லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்தமான 20 சுரங்கங்களை முதற்கட்டமாக வருவாய் பகிர்வு அடிப்படையில் தனியார் மூலம் இயக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. மும்பையில் நேற்றை தினம் இந்த சுரங்கங்களின் திறப்பு விழா நடைபெற்றது. மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சுரங்கங்களைத் திறந்து வைத்தார்.

Mumbai Indians
Mumbai IndiansTwitter

ஐ.பி.எல் போட்டிகள் நிலவரம்:

நேற்றைய நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இன்று நடைபெறும் போட்டிகளில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது. மற்றொரு போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் மோதுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn: https://www.newssensetn.com/

Nalam360 : https://www.newssensetn.com/health

Newsnow: https://www.newssensetn.com/wow-news

Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com