ஆளுநர் ஏஜெண்ட் போல செயல்படக்கூடாது; ஆளுநர் எங்களை மதிக்க வேண்டும்.
கிழக்கு இந்திய கம்பெனியை அனுப்பிவிட்டு, வடக்கு இந்திய கம்பெனி ஆளுவதற்கா குடியரசு பெற்றோம்? என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறி உள்ளார்.
நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியும் தனித்துப் போட்டியிடுவதாக அறிந்திருந்த நிலையில், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னையில் இன்று பிரசாரத்தை மேற்கொண்டார்.
மந்தைவெளி பறக்கும் ரயில் நிலையம் அருகில் உள்ள விசாலாட்சி தோட்டம் குடிசைப் பகுதியில் (123 ஆவது வார்டு) இன்று அவர் பிரச்சாரம் செய்தார். காலை 11.30 மணிக்கு தனது காரில் வந்து இறங்கிய கமல், குடிசை பகுதிகளுக்குள் நடந்தே சென்றார். கமலை பார்த்த பொதுமக்கள் அவரை சூழ்ந்து கொண்டு நலம் விசாரித்தனர்.
“நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் மத்திய அரசு சொல்வதைத்தான் ஆளுநர் கேட்பார். நாம் தலைவர்களை தேடக் கூடாது. சமூக சேவகர்களை தேட வேண்டும். விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பும் நம்மால் மலம் அள்ளும் என் தம்பிகளுக்கு ஒரு இயந்திரம் கண்டுபிடிக்க முடியாதா? ஆளுநர், மத்திய அரசின் பேச்சை கேட்டு செயல்படுகிறர்; ஆளுநர் ஒரு ஏஜெண்ட் போல் செயல்படக் கூடாது.” என்று பேசினார்.
“வடக்கு இந்திய கம்பெனி கிழக்கு இந்திய கம்பெனியை அனுப்பிவிட்டு, வடக்கு இந்திய கம்பெனி ஆளுவதற்கா குடியரசு பெற்றோம்?,” என்றூம் கேள்வி எழுப்பினார்.