நேற்று மறைந்த நடிகர் விஜயகாந்த் உடல் பொதுமக்கள் பார்வைக்காக தீவுத்திடல் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கில் மக்கள் குவிந்து அஞ்சலி செலுத்துவதுடன் அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் கூட அவரது உடலுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
மத்திய அரசு சார்பில் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அஞ்சலி செலுத்துவார் என நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டிருந்தது.
விஜயகாந்த் 2001ம் ஆண்டு சிறந்த இந்திய குடிமகனுக்கான விருதை பெற்றவர். அவருக்கு தமிழ் தவிர பிற மொழிகள் தெரியாது என்ற போதிலும் குஜராத், ஒடிஷா மாநில மக்கள் இயற்கை பேரிடர்களால் தவித்த போது அவர்களுக்கும் உதவிக்கரம் நீட்டினார் விஜயகாந்த்.
இன்று சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார் நிர்மலா சீத்தாராமன். விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவின் கைகளை பிடித்து இரங்கல் தெரிவித்தார்.
பின்னர் பேசிய நிர்மலா சீதாராமன், "மக்களுக்கு உதவக்கூடிய நல்ல தலைவரை நாம் இழந்துவிட்டோம். விஜயகாந்த் மறைவு செய்தியறிந்து பிரதமர் மோடி மிகவும் வருத்தமடைந்தார். விஜயகாந்த் மிகவும் இளகிய மனம் கொண்டவர். எல்லாருக்கும் சமமான உணவு கிடைக்க வேண்டுமென நினைத்த மனிதநேயமிக்கவரை நாம் இழந்துவிட்டோம்" என்றார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust