பெருமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் கடந்த ஒரு வாரமாக தென் தமிழகம் தத்தளித்து வருகிறது. இன்னும் பல இடங்களில் நீர் கூட வடியாத நிலையில் மக்கள் வீடுகளுக்குள் தேங்கிய நீரில் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
ஆடுமாடுகள், வயல் வெளிகள், பொருட்கள், கருவிகள், வாகனங்கள் என இழந்தவற்றை பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம். வெள்ளத்தால் ஏற்பட்ட பொருளாதார தாக்கத்தில் இருந்து மீண்டு வருவதே இன்னும் சில ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும்.
தமிழக அரசு ஒவ்வொரு குடும்பத்துக்கும் 6000 ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது. மத்திய அரசிடம் 21000 கோடி ரூபாய் நிதி கேட்டுள்ளது. தேசிய பேரிடராக அறிவிக்கவும் கோரிக்கை வைக்க்கப்பட்டது. ஆனால் தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.
கடந்த 3 நாட்களாக பேரிடர் நிதி வழங்கும் விவாகரத்தின் மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அமைச்சர் உதயநிதி மற்றும் நிர்மலா சீத்தாராமன் இடையே வார்த்தை போர் நடைபெற்றது.
நிர்மலா சீத்தாராமன் கருத்துக்களுக்கு தமிழக கட்சிகள் கடும் எதிர்வினையாற்றின. இந்த நிலையில் வெள்ளம் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி பகுதியை பார்வையிட டிசம்பர் 26ம் தேதி நிர்மலா சீத்தாராமன் வருகை தருவதாக செய்திகாள் வெளியாகியிருக்கிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust