Morning News Tamil : தீபாவளி பண்டிகைக்கு ஏன் வாழ்த்து சொல்வதில்லை? முதல்வர் விளக்கம்

எல்லா மத விழாவுக்கும் வாழ்த்து தெரிவிக்கும் முதல்வர் ஏன், தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்துச் சொல்வதில்லை? எனக் கேள்வி எழுப்பினார். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், "இன்றைக்குத் திட்டமிட்டே ஒருசிலர் திமுகவை ஆன்மிகத்துக்கு எதிராக இருப்பதுபோல் காட்ட முயற்சி செய்கிறார்கள்.
Mk stalin
Mk stalin Twitter
Published on

தமிழக சட்டமன்ற நிகழ்வு:

தமிழக சட்டமன்றத்தில் நேற்றைய தினம் இந்து சமய அறநிலையத் துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது.

அப்போது, எல்லா மத விழாவுக்கும் வாழ்த்து தெரிவிக்கும் முதல்வர் ஏன், தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்துச் சொல்வதில்லை? எனக் கேள்வி எழுப்பினார். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், "இன்றைக்குத் திட்டமிட்டே ஒருசிலர் திமுகவை ஆன்மிகத்துக்கு எதிராக இருப்பதுபோல் காட்ட முயற்சி செய்கிறார்கள்.

இது பெரியார் ஆட்சி, அண்ணா ஆட்சி, தலைவர் கருணாநிதி ஆட்சி. ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால், இதுதான் திராவிட மாடல் ஆட்சி" என்றார். தருமபுரம் விவகாரம் குறித்து முதல்வருடன் பேசி சுமுகத் தீர்வு எடுக்கப்படும் என்றார்.

reserve bank
reserve bankTwitter

வங்கிக்கடன் வட்டி விகிதம் உயர்வு

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை (ரெபோ ரேட்) ரிசர்வ் வங்கி அவ்வப்போது மாற்றி அமைக்கும். இந்நிலையில், நேற்று ரிசர்வ் வங்கியின் பண கொள்கை குழு கூட்டம் நடந்தது.

கூட்டத்துக்கு ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமை தாங்கினார். அந்தக் கூட்டத்தில், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 40 அடிப்படை புள்ளிகள் (0.4 சதவீதம்) உயர்த்தப்பட்டது.

அதாவது, கடன் வட்டி விகிதம் 4 சதவீதத்தில் இருந்து 4.40 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது. வங்கிக்கடன் வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.4 சதவீதம் உயர்த்தியதால், வீடு, வாகன, தனிநபர் கடன்களுக்கான வட்டி அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது.

china
chinaTwitter

கொரோனா பரவல் : சீன தலைநகர் பீஜிங்கில் போக்குவரத்து முடக்கம்

சீனாவில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருகிறது. அந்த நாட்டின் வர்த்தகத் தலைநகரான ஷாங்காயில் கடந்த ஒரு மாத காலமாக தொற்று பரவல் உச்சத்தில் இருக்கிறது.

இதன் காரணமான அங்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த 2 வாரங்களாக தலைநகர் பீஜிங்கில் கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது.

நேற்று காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பீஜிங்கில் புதிதாக 53 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், பீஜிங்கில் உள்ள 40-க்கும் மேற்பட்ட சுரங்க ரெயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. 158 வழித்தடங்களில் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

Mk stalin
இந்திய ரயில்வே : மது வாங்க ரயிலை நிறுத்திய இன்ஜின் டிரைவர் - என்னய்யா நடக்குது இங்க?

அமெரிக்க வெளியுறவு அமைச்சருக்கு கொரோனா

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கனுக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

இதுபற்றி ஆன்டனியின் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தடுப்பூசி செலுத்தி கொண்டும், முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்தியும் அவருக்கு லேசான அறிகுறிகள் தென்பட்டன. முதல் பரிசோதனையில் தொற்று இல்லை என தெரிய வந்தது. எனினும், அடுத்த பரிசோதனையில் தொற்று உறுதியானது. ஆன்டனி பல நாட்களாக அதிபர் பைடனைப் பார்க்கவில்லை.

அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, ஆன்டனியுடன் பைடன் நெருங்கி இருக்கவில்லை என தெரிவித்தருக்கிறது. இதே போன்று, கடந்த ஏப்ரலில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது எனக் கூறினார்.

IPL 2022
IPL 2022

ஐபிஎல் போட்டிகள் நிலவரம்

நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இன்று நடைபெறும் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

Mk stalin
"ஹிட்லர் ஒரு யூதர்" - ரஷ்யா கூறுவது உண்மையா? - விரிவான தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on :

Newssensetn: https://www.newssensetn.com/

Nalam360 : https://www.newssensetn.com/health

Newsnow: https://www.newssensetn.com/wow-news

Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com