”ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் கிடையாது” : வெற்றிமாறனுக்கு கமல்ஹாசன் ஆதரவா?

இந்து மதம் என்கிற பெயர் ராஜராஜசோழன் காலத்தில் இல்லை. சைவம் வைணவம் சமணம் தான் இருந்தது. இந்து என்பது வெள்ளைக்காரன் வைத்த பெயர் என்றார். இவையெல்லாம் சரித்திரம் எனவும் கூறினார் கமல்ஹாசன்.
கமல்ஹாசன்
கமல்ஹாசன்Twitter
Published on

ராஜராஜ சோழன் இந்து மன்னன் இல்லை என்ற இயக்குனர் வெற்றிமாறனின் கருத்துக்கு ஆதரவாக களமிறங்கிய கமல்ஹாசன், சோழர்கள் காலத்தில் ’இந்து மதமே இல்லை' என்று கூறியுள்ளார்.

கல்கியின் புகழ்பெற்ற நாவலைத் தழுவி இயக்குநர் மணிரத்னம் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சோழர் ராஜ்ஜியத்தின் வரலாற்றைத் திரையில் எடுத்துக் காட்டும் படமாக வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்த படம் வெளியானது முதல் சோழர்கள் குறித்த பேச்சுகள் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை கமல்ஹாசன் மற்றும் நடிகர்கள் விக்ரம், கார்த்தி ஆகியோர் பொதுமக்களுடன் அமர்ந்து கண்டுகளித்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் பேசுகையில்,

இங்கே நான் வந்திருப்பது தமிழ் சினிமாவின் ரசிகனாக.

இந்த படத்தின் ஆரம்பத்தில் பொற்காலத்தைப் பற்றிய வசனங்கள் வரும், அது என்னுடைய குரல் என்பதை மீண்டும் ஒருமுறை சொல்ல ஆசைப்படுகிறேன்.

தமிழ் சினிமாவிற்கு நூறு வயது எனக்கு 67. இந்த நல்ல தருணத்தில் இவர்களுடன் சேர்ந்து பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றியை கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

கமல்ஹாசன்
பொன்னியின் செல்வன்: "சோழர் வரலாற்றை தெரிந்துகொள்ள தவறிவிட்டேன்" ஆனந்த் மஹிந்திரா வருத்தம்

தொடர்ந்து பேசிய அவர்,

இந்து மதம் என்கிற பெயர் ராஜராஜசோழன் காலத்தில் இல்லை. சைவம் வைணவம் சமணம் தான் இருந்தது. இந்து என்பது வெள்ளைக்காரன் வைத்த பெயர் என்றார். இவையெல்லாம் சரித்திரம் எனவும் கூறினார் கமல்ஹாசன்.

இதற்கு முன் இயக்குநர் வெற்றிமாறன்

"திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசுவதும், ராஜராஜ சோழனை இந்து மன்னராக்குவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என்று பேசிருந்தார்.

கமல்ஹாசன்
பொன்னியின் செல்வன் கற்பனை தானா? சோழர்கள் பற்றிய உண்மையை எப்படி தெரிந்துகொள்ளலாம்?

வெற்றிமாறனின் கருத்துக்கு சீமான், உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தாலும், பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், "தமிழர்கள் இந்துக்கள் இல்லை என்றால் யாருமே இந்து இல்லை" என்று கூறினார்.

வெற்றி மாறனுக்கு ஆதரவாகவும் மறுப்பாகவும் இணையத்தில் நெட்டிசன்கள் பேசிவரும் நிலையில் கமல்ஹாசன் தற்போது ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் கிடையாது என்று கருத்து கூறியிருப்பது வெற்றி மாறனுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவிப்பதாக பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com