கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய வசதிகள் இல்லை என கூறுவது தவறான தகவல் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. அதன்படி வெளிமாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கு பயணிகள் சிலர் கடும் விமர்சனத்தை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று ஆம்னி பேருந்துகள் இனி கிளாம்பாக்கத்தில் இருந்துதான் புறப்பட வேண்டும் என்ற அரசின் உத்தரவுக்கு கடும் தெரிவிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நேற்று கோயம்பேடு தனியார் பேருந்து நிலையம் பரபரப்பானது
இது குறித்து அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களிடம் கூறுகையில்,
”பொங்கல் முடிந்தவுடன் கிளாம்பாக்கத்திலிருந்து பேருந்துகளை இயக்குவோம் என்றார்கள். தற்போது கோயம்பேடுதான் வேண்டும் என்றால் என்ன அர்த்தம்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அனைத்து வசதிகளும் உள்ளன. ஆகவே திட்டமிட்டப்படி, கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகள் இயங்கும்” என கூறியுள்ளார்.
இந்த நிலையில்பயணிகளுக்கு சரியான தகவலை வழங்காமல் அவர்களை சிரமத்திற்கு உள்ளாக்கும் ஆம்னி பேருந்துகளின் நிறுவனங்கள் மீது மோட்டார் வாகன சட்டம் விதிகளின் படியும், கிரிமினல் சட்டங்களின் படியும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை ஆணையர் சண்முகசுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust