ஒ.பன்னீர் செல்வம்
ஒ.பன்னீர் செல்வம்twitter

இலங்கை நீதிமன்றத்திற்கு ஓ.பன்னீர் செல்வம் டிவிட்டரில் கண்டனம்

சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க ரூ.1 கோடி செலுத்த வேண்டும் என்று கூறியுள்ள இலங்கை நீதிமன்றத்திற்கு அதிமுக ஒருங்கிணைபாளர் ஒ.பன்னீர் செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Published on

எல்லை மீறி மீன் பிடிப்பதாக அவ்வபோது தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடிக்கும். அப்படி இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்களை தாய்நாட்டிற்கு அழைத்து வரவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்கவும், தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள் வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைபாளர் ஒ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக மீனவர்கள்
தமிழக மீனவர்கள்twitter

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “பொதுவாக நாட்டிலுள்ள அனைத்து குடிமக்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையிலும், அந்த நீதி விரைந்து கிடைக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலும் தான் நீதிமன்றங்கள் இயங்குகின்றன. ஆனால், நீதிமன்றங்களே அநீதியான தீர்ப்பை வழங்கும் நடைமுறை இலங்கை நாட்டில் இருப்பது மிகுந்த அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது.

இராமேஸ்வரத்திலிருந்து மார்ச் 23 ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து, அவர்களுடைய படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

இதனை தொடர்ந்து தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு அண்மையில் இலங்கை நாட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது அவர்களை மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிமன்றம் அவர்கள் சிறையில் இருந்து வெளிவர நினைத்தால் ஒவ்வொரு மீனவரும் தலா 1 கோடி செலுத்திவிட்டு பிணையில் செல்லலாம் என்று உத்தரவிட்டது.

ஒ.பன்னீர் செல்வம்
மிதமான கொரோனா பாதிப்புகூட ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுத்தும் - ஐஐடி ஆராய்ச்சியாளர்கள்

இலங்கைக்கு பல உதவிகளை செய்துகொண்டிருக்கும் நாடு இந்தியா. இப்படிப்பட்ட உதவி செய்கின்ற நட்பு நாடான இந்திய நாட்டு மீனவர்களிடம் ஒரு கோடி ரூபாய் கட்டணம் செலுத்த சொல்வதும், அவர்களை துன்புறுத்துவதும், சிறைபிடிப்பதும் அவர்களது படகுகளை பறிமுதல் செய்து ஏலத்தில் விடுவதும் செய்நன்றி மறத்தலாகும்.

சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க ரூ.1 கோடி செலுத்த வேண்டும் என்று கூறியுள்ள இலங்கை நீதிமன்றத்திற்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்களை தாய்நாட்டிற்கு அழைத்து வரவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்கவும், தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்” என்று அதில் ஒ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

logo
Newssense
newssense.vikatan.com