நேற்று அவனியாபுரத்தில் நடைபெற்றதைத் தொடர்ந்து மதுரைப் பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
காலை எட்டு மணிக்கு இந்த போட்டிகள் தொடங்கிய நிலையில், வீரர்களும் காளைகளும் உற்சாகமாக முறுக்கேரியுள்ளனர்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியை பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி நடத்துகின்றது.
வணிகவரித்துறை மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் சார்பில் வீரர்கள் உறுதியேற்புடன் ஜல்லிக்கட்டு போட்டிகளைத் தொடங்கினர்.
இன்றைய போட்டியில் 300 வீரர்களும் 800 காளைகளும் பங்கேற்கின்றனர். வீரர்கள் ஒரு சுற்றுக்கு 25 பேர் என பல சுற்றுகளாக பிரிந்து விளையாடுவர்.
விளையாடும் வீரர்களுக்கு காயம் ஏற்படாத வகையில் தேங்காய்நார் படுக்கை அமைக்கப்பட்டுள்ளது. மாடுகளால் காயம் ஏற்பட்டால் முதலுதவி அளிக்க தற்காலிக மருத்துவ மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
போட்டிக்கு வரும் வீரர்களும் மாடுகளும் மருத்துவ சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். எந்த அசம்பாவிதமும் நடக்காதபடி 2000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கார், தங்க காசு, பிளாஸ்டிக் சேர், சைக்க்கிள், இரு சக்கர வாகனம் அண்டா, மெத்தை, தலையணை, அண்டா, பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் பரிசாக வழங்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust