Pichavaram Mangrove: இந்த சதுப்புநிலக் காடுகள் தமிழ்நாட்டிற்கு ஏன் முக்கியம்?

இங்கு பல அரிய வகை பறவைகளும் விலங்குகளும், தாவரங்களும் பாதுகாக்கப்படுகின்றன. குறிப்பாக பனிக்காலத்தில் இடம்பெயர் பறவைகள் பலவும் இந்த பிச்சாவரம் சதுப்பு நிலக் காடுகளில் தஞ்சம் புகுகின்றன.
Pichavaram Mangrove: இந்த சதுப்புநிலக் காடுகள் தமிழ்நாட்டிற்கு ஏன் முக்கியம்?
Pichavaram Mangrove: இந்த சதுப்புநிலக் காடுகள் தமிழ்நாட்டிற்கு ஏன் முக்கியம்?ட்விட்டர்
Published on

உலகின் மிகப் பெரிய சதுப்புநிலக் காடு இந்தியா வங்காளதேசம் எல்லையில் அமைந்துள்ள சுந்தரவனக் காடுகள். இது புலிகள் பாதுகாப்பில் மிக முக்கிய பங்காற்றுகிறது.

ஆனால், இந்த சுந்தரவனத்தை போலவே இந்தியாவில் இன்னும் சில சதுப்புநிலக் காடுகள் உள்ளன. அவற்றில் மிகப் பிரபலமாக இருப்பது பிச்சாவரம் சதுப்புநிலக் காடு. இவை உலகின் இரண்டாவது மிகப்பெரிய சதுப்புநில காடாகும்.

தமிழ்நாட்டின் சிதம்பரத்தில் அமைந்திருக்கும் இந்த பிச்சாவரம் சதுப்புநிலக் காடுகள் சென்னையில் இருந்து 230 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.

பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகள் இரண்டு முக்கியமான நதிகளின் முகத்துவாரம், அதாவது வடக்கில் வெள்ளாறும் சரணாலயத்திற்கு தெற்கில் கொள்ளிட கரையோரத்திற்கும் இடையில் அமைந்துள்ளது.

கிட்ட தட்ட 1,100 ஹெக்டேர் பரப்பளவை கொண்டுள்ள இந்த காடுகளில் 400 நீர்வழித்தடங்கள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. நீர்நிலைகள், தீவுகள் என அனைத்தும் ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளன.

இந்த வழித்தடங்கள் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் நம்மைக் கூட்டிச் செல்கிறது. இந்த சதுப்புநிலக் காடுகளின் வேர்கள் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைக்கப்பட்டுள்ளதால், மேலிருந்து, வெளியிலிருந்து பார்ப்பதற்கு ஒரு பெரிய மரம் ஒன்று இருப்பது போல தான் காட்சியளிக்கிறது. பார்ப்பவரை பிரம்மிப்பில் ஆழ்த்துகிறது இதன் இயற்கையான வடிவமைப்பு

இந்த சதுப்புநில மரங்களின் வேர்கள் சில அடி ஆழத்திற்கு தண்ணீருக்குள் நிரந்தரமாக வேரூன்றி உள்ளன

இங்கு பல அரிய வகை பறவைகளும் விலங்குகளும், தாவரங்களும் பாதுகாக்கப்படுகின்றன. குறிப்பாக பனிக்காலத்தில் இடம்பெயர் பறவைகள் பலவும் இந்த பிச்சாவரம் சதுப்பு நிலக் காடுகளில் தஞ்சம் புகுகின்றன.

painted storks, egrets, herons, and kingfishers உள்ளிட்ட பறவைகளை காணலாம்

மேலும் இங்குள்ள உவர் நீர் பல வகையான மீன், நண்டு, இறால்கள் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்களையும் ஆதரிக்கிறது. இந்த பிச்சாவரம் சதுப்புநில காடுகளைச் சுற்றி சுமார் 50 தீவுகள் உள்ளன. இத்தீவுகளின் நீராதராமகாவும், இங்குள்ள மீனவ சமூகத்தினரின் பொருளாதார ஆதாரமாகவும் உள்ளன இந்த தண்ணீரில் வாழும் உயிரினங்கள்

இந்த பேக்வாட்டர்களில்  rowing, kayaking and canoeing போன்ற தண்ணீர் சாகச விளையாட்டுகளும் அனுமதிக்கப்படுகிறது

Pichavaram Mangrove: இந்த சதுப்புநிலக் காடுகள் தமிழ்நாட்டிற்கு ஏன் முக்கியம்?
Port Blair: அந்தமானின் தலைநகர் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் | Podcast

மரங்கள் வெவ்வேறு இடங்களில் மூன்று முதல் 10 அடி ஆழத்தில் வளருகின்றன. மேலும், கடல் அலைகள் ஒரு நாளைக்கு இரண்டு முறை உப்பு நீரை உள்ளே கொண்டு வந்து, உப்புத்தன்மையை மாற்றுவதால், நீரின் நிலையில் மாற்றங்கள் காணப்படுகிறது.

இதற்கேற்றார் போல மரங்கள் தனித்துவமான வேர் அமைப்புகளைக் கொண்டுள்ளன. அதன் மெம்பரேன்களில் ஃபிரஷ் வாட்டர் (நன்நீர்) மட்டுமே உள்ளே புகும் அளவிற்கு மரங்களின் வேர் அமைந்துள்ளது. இந்த மரங்களில் நீரிலிருந்து வளரும் சுவாச வேர்கள், ஆக்சிஜன் எடுத்துக்கொள்ளக் கூடிய துளைகளுடன் இருக்கின்றன.

சதுப்புநில காடுகள் ஏன் முக்கியம்?

சதுப்புநில மரங்களின் வேர்கள் ஒரு இயற்கையான தாங்கல்களாக செயல்படுகின்றன. இவை கடலோரப் பகுதிகளில் இருக்கும் மண் அரிக்கப்படுவதிலிருந்து பாதுகாத்து புயல், அலைகளின் தாக்கத்தையும் குறைக்கின்றன

எளிமையாகச் சொன்னால் இவை ஒரு அரணாக செயல்படுகின்றன. இந்த மரங்கள் இல்லாமல், நமது கடலோரப் பகுதிகள் நீண்ட காலம் நீடிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

Pichavaram Mangrove: இந்த சதுப்புநிலக் காடுகள் தமிழ்நாட்டிற்கு ஏன் முக்கியம்?
இந்தியாவின் மிகப் பெரிய மாங்குரோவ் காடுகள் - சுந்தரவனம் பற்றிய சுவார்ஸ்ய தகவல்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com