
வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி நாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. அதையொட்டி 'அசாதி கா அம்ரித் மோட்சாவ்' என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யவுள்ளது.
அதில் ஒன்றாக, `ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக்கொடி' என்ற நிகழ்ச்சிக்கும் மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்த வருடம் நாம் 'அசாதி கா அம்ரித் மோட்சாவ்' நிகழ்ச்சிகளை மேற்கொள்கிறோம்.
அதை ஹர் ஹார் ட்ரையாங்கா (ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக்கொடி) இயக்கம் மூலம் மேலும் வலுப்படுத்துவோம். ஆகஸ்ட் 13 முதல் 15 வரை உங்கள் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றுங்கள்." எனத் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் 164 ஆண்கள் பள்ளிகளும், 280 பெண்கள் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. வரும் கல்வியாண்டில் கேரளாவில் மாநிலத்தில் உள்ள அனைத்து ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளிகளைக் கலப்புப் பள்ளிகளாக மாற்றி இணைக்கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று கேரள கல்வித்துறைக்குக் குழந்தை உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.
இதற்கு முன்பு பள்ளிகளில் உள்ள கழிப்பிடம், உள்கட்டமைப்புகளை மேம்படுத்த, இணைக்கல்வியின் அவசியம் குறித்துப் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. இதற்காக 90 நாட்களில் செயல்திட்டத்தை உருவாக்குமாறு கல்வித்துறையின் முதன்மை செயலாளர், பொதுக்கல்வி இயக்குநர் உள்ளிட்டோருக்குக் குழந்தை உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.
இலங்கையில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டின அதிபராக இருந்த ராஜபக்சே நாட்டைவிட்டு வெளியேறி தன் பதவியை ராஜினாமா செய்தார். அதையொட்டி இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வானார்.
இன்று அவர் தனது புதிய அமைச்சரவையை அமைக்க இருக்கிறார். இதில், மூத்த உறுப்பினரான தினேஷ் குணவர்தனாவை நாட்டின் புதிய பிரதமராக நியமிக்கிறார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. அதேபோல, புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன இன்று பதவியேற்றார். தினேஷ் குணவர்தனா இதற்கு முன்பு வெளியுறவுத் துறை மற்றும் கல்வி அமைச்சராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 3 ஒரு நாள் மற்றும் ஐந்து டி20 ர போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் ஒரு நாள் போட்டிகள் நடத்தப்படுகிறது.
இதன்படி இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது. ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா,ஹர்திக் பாண்ட்யா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, விராட் கோலி, ரிஷப் பண்ட், ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust