Morning News Today: உக்ரைன் மக்களுக்கு ரஷ்ய குடியுரிமை? - இது புதின் அரசியல்

கடந்த 2019-ம் ஆண்டு ரஷ்ய அரசு, கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பிராந்தியங்களில் உள்ள உக்ரைனியர்கள் எளிதில் ரஷ்ய குடியுரிமையை பெறுவதற்கான விரைவு குடியுரிமை திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
Putin
Putin NewsSense
Published on

உக்ரைன் மக்களுக்கு ரஷ்ய குடியுரிமை? - ரஷ்ய அதிபர் புதின்


ரஷ்யா 150 நாட்களாக உக்ரைனைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக அங்கு போர் புரிந்து வருகிறது. இந்தச் சூழலில் உக்ரைன் மக்கள் அனைவருக்கும் ரஷ்யக் குடியுரிமை வழங்குவதற்கான திட்டத்தை விரிவுபடுத்தும் ஆணையில் ரஷ்ய அதிபர் புதின் நேற்று கையெழுத்திட்டார்.

கடந்த 2019-ம் ஆண்டு ரஷ்ய அரசு, கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பிராந்தியங்களில் உள்ள உக்ரைனியர்கள் எளிதில் ரஷ்ய குடியுரிமையை பெறுவதற்கான விரைவு குடியுரிமை திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

தற்போது, கடந்த மே மாதம் மேற்கு உக்ரைனில் உள்ள ஜபோரிஜியா மற்றும் கெர்சன் பிராந்தியங்களை சேர்ந்த மக்களும் ரஷ்ய குடியுரிமையைப் பெறும் வகையில் அந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இந்நிலையில் தான் உக்ரைனில் உள்ள அனைத்து மக்களும் ரஷ்யக் குடியுரிமையைப் பெறுவதற்கு விரைவுக் குடியுரிமை திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான ஆணையில் ரஷ்ய அதிபர் புதின் கையெழுத்திட்டுள்ளார்.

Putin
PutinTwitter

இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி? - அதிமுக பொதுக்குழுவில் நடந்ததென்ன?

அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை விவகாரம் கடந்த ஒரு மாத காலமாகவே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில், வானகரத்தில் நேற்று நடந்த பொதுக்குழுவில் ஓ.பி.எஸ் தரப்பு பங்கேற்கவில்லை. அந்தப் பொதுக்குழுவில் அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும் ஓ.பி.எஸ், வைத்திலிங்கம், ஜே.சி.டி பிரபாகர், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டவர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் பதிவியிலிருந்து நீக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மற்றொருபுறம் ஓ.பன்னீர் செல்வம் எடப்பாடி பழனிசாமியையும், கே.பி.முனுசாமியையும் தான் கட்சியிலிருந்து நீக்குவதாகக் கூறினார்.

அ.தி.மு.க அலுவலகத்தில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் ஆதரவாளர்கள் மோதிக்கொண்டதால், அ.தி.மு.க தலைமை கழக அலுவலகம் வருவாய்த்துறையினரால் தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது.

ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி
ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமிTwitter

நிதி ஆயோக் புதிய தலைவராக பரமேஸ்வரன் ஐயர் தேர்வு


பரமேஸ்வரன் ஐயர் 'நிதி ஆயோக்' ன் தலைமை செயல் அதிகாரியாக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த பொறுப்பைத் தனக்களித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார். இவர் 1981-ம் ஆண்டு உத்தர பிரதேச பிரிவு பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரியாவார்

குடிநீர் மற்றும் தூய்மை பணிகள் துறையில் 25 ஆண்டுகள் பணி செய்திருக்கிறார். மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தைச் செயல்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார். மத்திய குடிநீர் மற்றும் தூய்மை பணிகள் அமைச்சகத்தின் செயலாளராக 2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டுவரை பணியாற்றினார்.

Parameswaran Iyer
Parameswaran IyerTwitter

இந்தியா - இங்கிலாந்து: ஒருநாள் போட்டி இன்று தொடக்கம்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி 20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இந்நிலையில் இன்று இரு அணிகளும் மோதிக்கொள்ளும் முதல் ஒருநாள் போட்டி தொடங்குகிறது.

Ind vs Eng
Ind vs EngTwitter
Putin
எடப்பாடி பழனிச்சாமி: இதுவரை அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்தவர்கள் இவர்கள்தான்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com