Rahul Gandhi : 'நான் தமிழன், என் ரத்தம் இங்கே கலந்திருக்கிறது'- ராகுல் நெகிழ்ச்சி

தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இளமைக் கால வாழ்க்கை குறித்த புத்தகமான உங்களில் ஒருவன் நேற்று சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது.
Rahul Gandhi

Rahul Gandhi

Newssense

Published on

நான் தமிழன் என்று சொன்னேன்

தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இளமைக் கால வாழ்க்கை குறித்த புத்தகமான உங்களில் ஒருவன் நேற்று சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது. புத்த்க வெளியீடு நிகழ்ச்சிக்கு துரை முருகன் தலைமை தாங்கினார். புத்தகத்தை வெளியிட்ட ராகுல் காந்தி பேசியதாவது, “தமிழ்நாட்டிற்கு வருவது எனக்கு எப்பொழுதுமே மகிழ்ச்சிதரக்கூடிய ஒன்றாகும்.

நாடாளுமன்றத்தில் இருந்து நான் வெளியே வந்தபொழுது, பத்திரிகையாளர் சந்திப்பின்போது ஒருவர் என்னிடம் கேட்டார், உங்களுடைய உரையில் என்ன காரணத்திற்காக நீங்கள் தமிழ்நாட்டைப்பற்றி குறிப்பிட்டீர்கள் என்று கேட்டார். நான் பலமுறை அதனை உணர்ந்திருக்கின்றேன். தமிழ்நாட்டின்மீது எந்த அளவிற்கு எனக்கு அன்பு இருக்கிறது என்று.

நாடாளுமன்றத்திலிருந்து நான் வெளியே வருகிறபொழுது, நான் தமிழன் என்று சொன்னேன்; என்னை அறியாமல் அந்த வார்த்தை வந்தது பின்னர்தான் நான் உணர்ந்தேன், ஏன் அந்த வார்த்தையை நான் சொன்னேன் என்று. ஏனென்றால், என்னுடைய ரத்தம் இந்த மண்ணில் கலந்திருக்கிறது. ஒரு தந்தையை இழப்பது என்பது, குறிப்பாக எனக்கு மிகப்பெரிய வேதனையான, சோகமான அனுபவம்தான். நான் அந்த சோகமான அனுபவத்தைத் திரும்பத் திரும்ப எண்ணிப் பார்க்கிறேன். அப்பொழுதுதான் நான் உணர்ந்தேன்; என்னை தமிழன் என்று அழைத்துக் கொள்ளவதற்கான எல்லா உரிமைகளும் எனக்கு இருப்பதாக.

'உங்களில் ஒருவன்' நூல் வெளியீடு

'உங்களில் ஒருவன்' நூல் வெளியீடு

Newssense

பிரதமரிடம் இருப்பது சரியாக புரிந்துகொள்ளாத ஒரு தன்மை

நான் என்னுடைய நாடாளுமன்ற உரையில் பேசுகின்றபொழுது, இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்று குறிப்பிட்டேன். நான் மாநிலங்கள் என்று சொல்கிறேன் என்றால், அந்த சொல் எங்கிருந்து வந்தது? ஒரு மாநிலம் என்றால் என்ன? மண்ணைப் பற்றியது - மக்களிடமிருந்து அந்த மண்ணினுடைய தன்மையை அறிவது - மக்களிடமிருந்து அவர்களுடைய குரல் வெளிவருவது - அவர்களுடைய குரலிலிருந்து அவர்களுடைய மொழி வெளிவருகின்றது - மொழியிலிருந்து கலாச்சாரம் வருகின்றது - கலாச்சாரத்திலிருந்து சரித்திரம் வருகின்றது - பின்னர் வரலாற்றிலிருந்து மாநிலம் உருவாகுகின்றது.

இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்று சொல்கின்றபொழுது, மாநிலங்களிலிருந்துதான் இந்தியா என்பதே வருகின்றது என்பதை நான் அழுத்தமாகச் சொன்னேன். பிரதமரிடம் இருப்பது சரியாக புரிந்துகொள்ளாத ஒரு தன்மை.

கிட்டத்தட்ட இந்த நாட்டில் இருக்கின்ற எல்லா மாநிலங்களைப்பற்றியும் அவர் புரிந்துகொள்ளாத ஒரு தன்மையில் இருக்கிறார். நாடு விடுதலைப் பெற்றதிலிருந்து இப்பொழுதுதான் முதன்முறையாக ஒரு மாநிலத்திலிருந்த உரிமைகள் பறிக்கப்பட்டு இருக்கின்றன. இதற்கு முன்பு எப்பொழுதும் இப்படி நடந்ததில்லை.

Rahul Gandhi

காலநிலை மாற்றம் : 360 கோடி மக்கள் எதிர்காலம் கேவிக்குறி - எச்சரிக்கும் ஐ.பி.சி.சி

Stalin and Rajiv Gandhi

Stalin and Rajiv Gandhi

Newssense

பாஜக வரலாற்றை எதிர்த்துப் போரிடுகிறார்கள்

ஜம்மு காஷ்மீர் மக்கள், தங்களைத் தாங்களே ஆள முடியாத ஒரு நிலை ஏற்பட்டு இருக்கிறது. குஜராத், உத்தரப்பிரதேசம் போன்ற பகுதியிலிருக்கின்ற அதிகாரிகள், இப்பொழுது ஜம்மு காஷ்மீரை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். இது ஜம்மு காஷ்மீருக்கு அவர்கள் அளித்திருக்கின்ற மிகப்பெரிய அநீதியாகும். எங்களுடைய ஒட்டுமொத்தமான கருத்து வேற்றுமையில் ஒற்றுமை.

நீங்கள் யார், இந்தியா எப்படி இருக்கவேண்டும் என்று தீர்மானிப்பதற்கு? ஏன் இந்திய நாட்டு மக்கள் - இந்தியா எப்படி இருக்கவேண்டும் என்று தீர்மானிக்கக் கூடாது?

நம்முடைய அமைப்பு, மக்களுடைய குரல்தான் எதிரொலிக்கவேண்டும். ஆனால், தொடர்ச்சியாகத் திட்டமிட்டு, மக்களுடைய உரிமைகளும், உணர்வுகள் நசுக்கப்படுகின்றன. நீதித்துறை, தேர்தல் ஆணையம், பத்திரிகை துறை ஆகியவை எல்லாம் தொடர்ச்சியாகத் திட்டமிட்டு நசுக்கப்படுகின்றன. பாரதீய ஜனதா, எந்தக் கற்பனையான உலகத்திலும் வாழவேண்டும்; அவர்களை எப்படி எதிர்கொள்வது என்பது எங்களுக்குத் தெரியும். பாஜக வரலாற்றை எதிர்த்துப் போரிடுகிறார்கள் . அவர்கள் பாரம்பரியத்தை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அது அவர்களால் முடியாது - தோற்றுக்கொண்டேதான் இருப்பார்கள்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com