பேரறிவாளன்
பேரறிவாளன்Twitter

பேரறிவாளன் விடுதலை: 30 ஆண்டுகளாக நடந்த வழக்கு - ஒரு Time Line பார்வை

ராஜீவ் காந்தி கொலை வழைக்கில் கைது செய்யப்பட்டிருந்த பேரறிவாளனை விடுதலை செய்தது உச்சநீதிமன்றம். இதன் மூலம் 30 ஆண்டுகளுக்கு மேலானா சிறை வாழ்வு நிறைவு பெற்றிருக்கிறது. இந்த வழக்கு கடந்து வந்த பாதை இதோ...

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைதண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்தார். இன்று, அவர் அளித்த மனுவின் மீதான விசாரணையில், "ஆளுநர் முடிவெடுக்காமல் தாமதப்படுத்தியது தவறு" எனக் கூறியது நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு. சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது உச்ச நீதிமன்றம்.

1. 1991, மே 21

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார்.

2. 1991, ஜூன்

19 வயது இளைஞனான பேரறிவாளனை சிபிஐ அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். பேட்டரி வாங்கிக் கொடுத்ததாக பேரறிவாளன் மீது குற்றம்சாட்டப்பட்டது.

3. 1998

பேரறிவாளன் உள்பட ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 25 பேருக்கு மரண தண்டனை விதித்து வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

4. 1999, மே

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், குற்றம்சாட்டப்பட்ட 9 பேர் விடுவிக்கப்பட்டனர்.

5.

பேரறிவாளன், நளினி, முருகன் மற்றும் சாந்தனுக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது. ரவிச்சந்திரன், ஜெயக்குமார் மற்றும் ராபர்ட் பயஸ் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

6. 2014, பிப்ரவரி

பேரறிவாளன் மற்றும் மற்ற 3 பேர் அனுப்பிய கருணை மனு மீது எந்த முடிவு எடுக்காமல் தாமதப்படுத்தியதைச் சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றம், பேரறிவாளன் உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது.

7. 2015, டிசம்பர்

அரசியல் சாசன பிரிவு 161-ன் கீழ் தன்னை விடுதலை செய்யக் கோரி தமிழக ஆளுநருக்கு பேரறிவாளன் கருணை மனு அனுப்பி வைத்தார்.

பேரறிவாளன்
'விடியல் ஆட்சி' தொடரும் அடக்குமுறை - பா.ரஞ்சித் ஆவேசம்

8. 2016, மார்ச்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டது.

9. 2017, நவம்பர்

பேரறிவாளனுக்கும் ராஜீவ் காந்தி கொலை வழக்கிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என சிபிஐயின் முன்னாள் விசாரணை அதிகாரி தியாகராஜன் தெரிவித்தார்.

10. 2018 ஏப்ரல்

தமிழக அரசின் கருத்துருவை மத்திய அரசு நிராகரித்தது

பேரறிவாளன்
திருவாரூர் பாஜக தலைவர் அண்ணாமலை திரண்ட கூட்டம்: புகைப்படம் போலியா? உண்மை என்ன ? Fact Check

11. 2018 செப்டம்பர்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யக் கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

12. 2021 ஜூன்

பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் , தனது மகனை நிரந்தரமாக விடுதலை செய்வதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு, முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்தார்.

13. 2022 மார்ச்

பேரறிவாளனுக்கு முதல் முறையாக ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பேரறிவாளன்
கோவை: ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு வீடு - ஆனந்த் மகிந்திராவின் அன்னையர் தின சர்ப்ரைஸ்

14. 2022 மே 11

இந்த வழக்கைத் தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தது.

15. 2022 மே 18

உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.

பேரறிவாளன்
பேரறிவாளன் விடுதலை : உச்சநீதி மன்றம் தீர்ப்பு - 31 வருட சிறை வாழ்க்கை முடிவுக்கு வந்தது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com