bun parotta
bun parottaTwitter

மதுரையின் பிரபல பன் பரோட்டா கடைக்கு சீல் - காரணம் என்ன?

மதுரையின் பிரபலமான உணவுகளில் ஒன்றான பன் பரோட்டா கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
Published on

மதுரை மல்லிக்குப் பின்னர் ஜிகிர்தண்டா, பரோட்டா போன்ற உணவுகள் பிரபலம். மதுரை சார்ந்தவர்களாக இருக்கட்டும் அல்லது வெளி ஊரைச் சேர்ந்தவர்களாக இருக்கட்டும் இந்த மதுரை பன் பரோட்டாவைத் தேடிச் சென்று சுவைத்துச் சாப்பிடுவார்கள்.

அப்படி மக்கள் மத்தியில் பிரபலமான பன் பரோட்டாவின் மகிமையை, பரோட்டா பிரியர்கள் அறிவார்கள். அவ்வாறு மதுரையின் பல்வேறு இடங்களில் கிடைக்கும் இந்த பன் பரோட்டாவிற்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அவர்களுக்கு தற்போது வந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

bun parotta
bun parottaTwitter

மதுரை சாந்தமங்கலம் ஆவின் சந்திப்பில் சாலையோரம் செயல்பட்டு வந்த பிரபல பன் பரோட்டா கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

பெட்டிக்கடைக்கான அனுமதி பெற்ற நிலையில் சாலையை ஆக்கிரமித்து பரோட்டா கடை நடத்தி வந்ததால் சீல் வைக்கப்பட்டதாகவும், சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

bun parotta
இரவு உணவு : இரவில் சாப்பிடவே கூடாதவையும், சாப்பிட வேண்டியையும் - விரிவான தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com