செந்தில் பாலாஜி : ஐ.டி ரெய்டுக்கு வந்த அதிகாரிகளின் கார் கண்ணாடியை உடைத்த ஆதரவாளர்கள்!
செந்தில் பாலாஜி : ஐ.டி ரெய்டுக்கு வந்த அதிகாரிகளின் கார் கண்ணாடியை உடைத்த ஆதரவாளர்கள்!Twitter

செந்தில் பாலாஜி : ஐ.டி ரெய்டுக்கு வந்த அதிகாரிகளின் கார் கண்ணாடியை உடைத்த ஆதரவாளர்கள்!

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை, கரூர், கோவை உட்பட பல்வேறு இடங்களில் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, கரூரில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் தொடர்புடைய இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகளின் கார் கண்ணாடியை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர்.

வருமான வரித்துறை அதிகாரிகளின் கார் கண்ணாடியை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கிய வீடியோவை ட்விட்டரில் ஷேர் செய்த சவுக்கு சங்கர் 

கோவை: ரியல் எஸ்டேட் அதிபர் செந்தில் கார்த்திகேயன் தொடர்புடைய இடங்களில் ஐ.டி ரெய்டு!

வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்த உள்ளது பற்றி முன்கூட்டியே எதுவும் தெரிவிக்கவில்லை. அதிகாரிகள் புகார் அளித்தால், அவர்களை தாக்கியவர்கள் மற்றும் அவர்களின் வாகனங்களை தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும்- கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல்

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த ஊரான ராமேஸ்வரபட்டியில் வருமான வரித்துறையினருக்கு கிராம மக்கள் எதிர்ப்பு: 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வருமான வரித்துறையினரை முற்றுகையிட்டுள்ளனர்

அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் வீட்டில் சோதனை நடத்த கூடுதல் பாதுகாப்பு வழங்குமாறு ஐடி அதிகாரிகள் கோரிக்கை

logo
Newssense
newssense.vikatan.com