ஷர்மிளா : கனிமொழி பயணித்த பிறகு தனியார் பேருந்து பெண் ஓட்டுநர் பணி நீக்கம் - என்ன காரணம்?

இன்று தி.மு.க. எம்.பி. கனிமொழி பேருந்தில் பயணம் செய்த நிலையில், திடீரென ஷர்மிளாவை பேருந்தின் உரிமையாளர் பணி நீக்கம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஷர்மிளா : தனியார் பேருந்து பெண் ஓட்டுநர் அதிரடி பணி நீக்கம் -  என்ன காரணம்?
ஷர்மிளா : தனியார் பேருந்து பெண் ஓட்டுநர் அதிரடி பணி நீக்கம் - என்ன காரணம்?Twitter
Published on

கோவையைச் சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் வடவள்ளியில் இருந்து ஒண்டிப்புதூர் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.

கோவையின் முதல் பெண் டிரைவரான ஷர்மிளாவுக்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

அவர் பஸ் ஓட்டுவது தொடர்பாக பல்வேறு வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாவதுண்டு.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் இந்த பேருந்தில் பயணித்து, ஷர்மிளாவை பாராட்டினார். இன்று காலை திமுக கனிமொழி எம்.பி., ஷர்மிளா இயக்கிய பேருந்தில் பயணம் மேற்கொண்டார்.

அவர் காந்திபுரத்தில் இருந்து பீளமேடு வரை பேருந்தில் பயணம் செய்தார். பயணத்தின்போது ஷர்மிளாவுக்கு கனிமொழி எம்.பி. தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அவருடன் சிறிது நேரம் பேருந்தில் பயணித்தபடியே பேசி சென்றார்.

இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்த ஷர்மிளாவை பேருந்தின் உரிமையாளர் பணி நீக்கம் செய்துள்ளார்.

ஷர்மிளா : தனியார் பேருந்து பெண் ஓட்டுநர் அதிரடி பணி நீக்கம் -  என்ன காரணம்?
இந்தியாவில் மொத்தம் எத்தனை வகை ஓட்டுநர் உரிமங்கள் உள்ளன? எப்படி பெறலாம்?

விளம்பரத்திற்காக பயணிகளை ஏற்றுவதாக ஓட்டுநர் ஷர்மிளாவுடன் பேருந்து உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இன்று தி.மு.க. எம்.பி. கனிமொழி பேருந்தில் பயணம் செய்த நிலையில், திடீரென ஷர்மிளாவை பேருந்தின் உரிமையாளர் பணி நீக்கம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ஷர்மிளா கூறுகையில், 'கனிமொழி மேடம் நாம் இயக்கிய பேருந்தில் வந்து பாராட்டினார். அவர் டிக்கெட் எடுத்து தான் பேருந்தில் பயணித்தார். கண்டக்டர் பயணிகளிடம் மரியாதைக்குறைவாக பேசினார்.

அவரிடம் மரியாதையாக பேசுமாறு அறிவுறுத்தினேன். இது குறித்து உரிமையாளரிடம் கூற சென்றபோது எனக்கு சரியான மரியாதை கிடைக்கவில்லை. பிறகு, பேருந்து உரிமையாளர் என்னிடம், நீ பிரபலமாகுவதற்காக இதெல்லாம் செய்வாயா எனக் கூறி பணியில் இருந்து விலகுமாறு கூறினார்' என்றார்

ஷர்மிளா : தனியார் பேருந்து பெண் ஓட்டுநர் அதிரடி பணி நீக்கம் -  என்ன காரணம்?
Ramya Ravi: பிரியாணி பிசினஸில் 10 கோடி சம்பாதிக்கும் பெண் - ஊர் குருவி பருந்தான கதை!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com