வீல்சேரில் டெலிவரி செய்யும் மாற்றுத்திறனாளி சோமேட்டோ ஊழியர் - யார் அவர்?

மாற்றுத்திறனாளியான அவர் அவரது ஸ்பெஷல் வாகனத்தில் செல்லும் வீடியோ 7லட்சம் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. ஒரு லட்சத்துக்கும் மேலானவர்கள் அந்த வீடியோவை லைக் செய்துள்ளனர்.
zomato agent
zomato agentTwitter
Published on

மாற்றுத் திறனாளியான ஒருவர் சோமேட்டோவில் டெலிவரி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Grooming Bulls என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான இந்த வீடியோ பலரது மனதைக் கவர்ந்துள்ளது. இதற்கு, "உத்வேகம் என்ற சொல்லுக்குக்கு இது தான் சிறந்த எடுத்துக்காட்டு" எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில் வரும் நபர் சென்னையைச் சேர்ந்த கணேஷ் முருகன் எனத் தெரியவந்துள்ளது. இவருக்கு 37 வயது.

கணேஷ் முருகன் அவரது ஸ்பெஷல் வண்டியில் செல்லும் வீடியோ 7லட்சம் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. ஒரு லட்சத்துக்கும் மேலானவர்கள் அந்த வீடியோவை லைக் செய்துள்ளனர்.

அது என்ன ஸ்பெஷல் வண்டி?

கணேஷ் பயன்படுத்தும் வாகனம் ஒரு வீல் சேர் வண்டியாகும். இதனை மோட்டார் வாகனமாகவும் சாதாரண வீல் சேராகவும் பயன்படுத்த முடியும்.

வீல் சேராக மாற்றுவதற்கு ஒரு பட்டனை அழுத்தினால் போதும்.

இந்த வாகனம் ஐஐடி மெட்ராஸ் மாணவர்களால் உருவாக்கப்பட்டது.

zomato agent
ஆங்கிலத்தில் 35, கணிதத்தில் 36 - வைரலாகும் IAS அதிகாரியின் 10ம் வகுப்பு மார்க் ஷீட்

Zomato -க்கு நன்றி சொன்ன நெட்டிசன்கள்

இந்த வீடியோவை முன்னிட்டு மாற்றுத் திறனாளி ஒருவருக்கு வேலை வழங்கியதற்காக சோமேட்டோ நிறுவனத்துக்கு நெட்டிசன்கள் நன்றி சொல்லி வருகின்றனர்.

6 ஆண்டுகளுக்கு முன் நடந்த விபத்தினால் கனேசனுக்கு உடலின் ஒரு பகுதி செயலிழந்தது.

அந்த விபத்து வாழ்க்கையையே புரட்டிப் போட்டாலும் தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து வருகிறார் கனேஷ் முருகன்.

zomato agent
Jhund : இவரின் நிஜ வாழ்க்கை கதைதான் அமிதாப் பச்சனின் ‘ஜுண்ட்’ - Inspiring Story

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com