மாநில அரசுகளுக்கு வரிப்பகிர்வு நிதியை முன்கூட்டியே விடுவித்த மத்திய அரசு!
மாநில அரசுகளுக்கு வரிப்பகிர்வு நிதியை முன்கூட்டியே விடுவித்த மத்திய அரசு!Twitter

மாநில அரசுகளுக்கு வரிப்பகிர்வு நிதியை முன்கூட்டியே விடுவித்த மத்திய அரசு!

அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்துக்கு ரூ.13,088.51 கோடி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு ரூ.2,976.10 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
Published on

பண்டிகைகள், வருடப் பிறப்பை ஒட்டி மாநில அரசுகளின் கரங்களை வலுப்படுத்தும் நோக்கில் மாநில அரசுகளுக்கு ஜனவரி 10-ம் தேதி வழங்க வேண்டிய வரி பகிர்வுத் தொகை ரூ.72,961.21 கோடியை மத்திய அரசு முன்கூட்டியே விடுவித்துள்ளது.

இதன்மூலம், மாநிலங்கள் பல்வேறு சமூக நலத்திட்டங்களையும், வளர்ச்சிக்கான உள்கட்டமைப்புத் திட்டங்களையும் மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு ரூ.2976.10 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்துக்கு ரூ.13,088.51 கோடி, பீகாருக்கு ரூ.7,338.44 கோடி, மத்தியப் பிரதேசத்துக்கு ரூ.5,727.44 கோடி, மேற்கு வங்கத்துக்கு 5,488.88 கோடி, மகாராஷ்டிராவுக்கு ரூ.4608.96 கோடி, ராஜஸ்தானுக்கு 4,396.64 கோடி, தமிழ்நாட்டுக்கு ரூ.2,976.10 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் நிதிப்பகிர்வில் பாரபட்சம் இருப்பதாக தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து குரலெழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

மாநில அரசுகளுக்கு வரிப்பகிர்வு நிதியை முன்கூட்டியே விடுவித்த மத்திய அரசு!
உலக வரலாற்றிலேயே பணக்கார வியாபாரி! ஆங்கிலேயருக்கே நிதி உதவி செய்தவர் பற்றி தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com