தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் LIVE
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் LIVE Twitter

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் LIVE - நெல் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படும்

தமிழ்நாட்டில் சாகுபடி பரப்பு 1.93 லட்சம் ஹெக்டேராக அதிகரிக்கப்பட்டுள்ளது; கடந்த 2 ஆண்டில் 1.5 லட்சம் விவசாய மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது

வேளாண் நிதிநிலை அறிக்கையை வாசிக்க தொடங்கினார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

1.5 லட்சம் விவசாய மின் இணைப்பு

தமிழ்நாட்டில் சாகுபடி பரப்பு 1.93 லட்சம் ஹெக்டேராக அதிகரிக்கப்பட்டுள்ளது; கடந்த 2 ஆண்டில் 1.5 லட்சம் விவசாய மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது

6.77 லட்சம் விவசாயிகளுக்கு ₹783 கோடி இழப்பீடு

பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் 2021-22ல் 40.74 லட்சம் ஏக்கர் பரப்பளவில் 26 லட்சம் விவசாயிகள் பதிவு செய்தனர்” தமிழ்நாடு அரசால் ₹1695 கோடி காப்பீடு கட்டணம் மானியமாக வழங்கப்பட்டு, 6.77 லட்சம் விவசாயிகளுக்கு ₹783 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது”

2 தென்னங்கன்றுகள் வழங்கப்படும்

“2,504 கிராம பஞ்சாயத்துகளில் தென்னகன்று இல்லாத குடும்பங்களுக்கு தலா 2 தென்னங்கன்றுகள் வழங்கப்படும்”

15 லட்சம் தென்னங்கன்றுகள்

“ஊருக்கு 300 குடும்பங்கள் வீதம் தமிழ்நாடு முழுவதும் 15 லட்சம் தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும்” - வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

நம்மாழ்வார் பெயரில் விருது

வேளாண்மையில் நம்மாழ்வார் ஆற்றிய பெரும் பங்கை எடுத்துரைக்கும் விதமாக அங்கக வேளாண்மையில் ஈடுபடுபவர்களுக்கு, தமிழ்நாடு அரசால் நம்மாழ்வார் பெயரில் விருது வழங்கப்படும்

வேளாண் கருவிகள் தொகுப்பு

“60,000 சிறு குறு மற்றும் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு வேளாண் கருவிகள் தொகுப்பு ₹15 கோடி செலவில் வழங்கப்படும்” -அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

வாட்ஸ் அப் குழு

விவசாயிகளுக்கு சாகுபடி தொழில்நுட்பாங்கள், வானிலை முன்னறிவிப்புகள் போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்க வட்டார அளவில் வாட்ஸ் அப் குழு அமைக்கப்படும்!”

₹5 லட்சம் பரிசும்

சிறந்த இயற்கை விவசாயிக்கு நம்மாழ்வார் பெயரில் விருதும், ₹5 லட்சம் பரிசும் வழங்கப்படும்” - வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

2 கிலோ கேழ்வரகு வழங்கப்படும்

குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ கேழ்வரகு வழங்கப்படும்- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

இயற்கை உரம் தயாரிக்க ₹3 கோடி நிதி ஒதுக்கீடு

சேலம், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் கழிவு மண்ணிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட இயற்கை உரம் தயாரிக்க ₹3 கோடி நிதி ஒதுக்கீடு”

கருவேப்பில்லை சாகுபடி

கோவையில், கருவேப்பில்லை சாகுபடியை அதிகரிக்க 5 ஆண்டுகளில் 1,500 ஹெக்டேரில் செயல்படுத்த ₹2.5 கோடி ஒதுக்கீடு!

முருங்கை ஏற்றுமதி

தேனி, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி, திருப்பூர், அரியலூர், மதுரை மாவட்டங்களை உள்ளடக்கிய முருங்கை ஏற்றுமதி மண்டலத்தில் 1000 ஏக்கரில் சாகுபடிகளை உயர்த்திட ₹11 கோடி ஒதுக்கீடு”

தக்காளி உற்பத்தியை அதிகரிக்க சொட்டு நீர் பாசனம், அதிக மகசூல் தரும் பயிர் ரகங்களை பயிரிடுதல் போன்ற உத்திகள் ஊக்குவிக்கப்படும்

₹50 லட்சம் ஒதுக்கீடு

“ 200 ஏக்கர் பரப்பளவில், விதை உற்பத்தி செய்து மானிய விலையில் விநியோகிக்க ₹50 லட்சம் ஒதுக்கீடு"

- வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

பள்ளி மாணவர்களுக்கு பண்ணைச் சுற்றுலா - ₹ 1 கோடி நிதி ஒதுக்கீடு

வாழைக்கான தனி தொகுப்பு திட்டம்

உலக சந்தையில் தேனி மாவட்ட வாழைக்கு தனி அடையாளம் உருவாக்கிட, ₹130 கோடி மதிப்பீட்டில் வாழைக்கான தனி தொகுப்பு திட்டம்

நெல் கொள்முதல்

நெல் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படும்

வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

புவிசார் குறியீடு

கடலூர் கோட்டைமலை கத்திரி, மதுரை செங்கரும்பு, சிவகங்கை கருப்பு கவுனி அரிசி ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு பெற ₹30 லட்சம் மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டுள்ளது

logo
Newssense
newssense.vikatan.com