செந்தில் பாலாஜி: எந்த வழக்கில் கைது செய்யப்பட்டார்? அரசியல் பின்னணி என்ன? முழு விவரம்

உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்ததாகவும் இதனால் பாதிக்கப்பட்டோர்கள் மற்றும் மனுதாரர்கள் இடையே சமரசம் ஏற்பட்டுவிட்டதாக கூறி செந்தில் பாலாஜி மீதான குற்றவியல் வழக்குகளை நிறுத்திவைக்கப்பட்டது.
செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதற்கான பின்னணி என்ன? முழு விவரம்
செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதற்கான பின்னணி என்ன? முழு விவரம்Twitter

அமைச்சர் செந்தில் பாலாஜி இரவோடு இரவாக கைது செய்யப்பட்டுள்ளார். எதற்காக இந்த கைது நடவடிக்கை, அவர் மீது தொடரப்பட்ட வழக்கின் பின்னணி என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

கடந்த 2011 முதல் 2015 வரை ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தார். 2014ஆம் ஆண்டு போக்குவரத்து துறையில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஓட்டுநர், நடத்துநர் மற்றும் இஞ்சினியர்கள் பணி நியமனம் தொடர்பாக பண மோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது புகார் அளிக்கப்பட்டது.

செந்தில் பாலாஜி பெயர் இல்லை

2015ஆம் ஆண்டு தேவசகாயம் என்பவர் தன்னை ஏமாற்றிவிட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது புகார் அளிக்க, அதன் பேரில் ஏமாற்றுதல், சதி மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஆனால் முதல் தகவல் அறிக்கையில் (FIR) அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயர் இடம்பெறவில்லை. இந்த பண மோசடி வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்பு இருப்பதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து, அப்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார், உறவினர் கார்த்திக், போக்குவரத்துக் கழக அதிகாரிகள் என 40-க்கும் மேற்பட்டோர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.

செந்தில் பாலாஜி மீது பணமோசடி வழக்குப்பதிவு

சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. ஆனால் செந்தில் பாலாஜி தன் மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்துவிட்டதாக தானே முன்வந்து கூறினார். இதனால் பாதிக்கப்பட்டோர்கள் மற்றும் மனுதாரர்கள் இடையே சமரசம் ஏற்பட்டுவிட்டதாக கூறி செந்தில் பாலாஜி மீதான குற்றவியல் வழக்குகளை நிறுத்திவைத்தது உயர்நீதிமன்றம்.

இதற்கிடையே, செந்தில் பாலாஜி மீது பணமோசடி வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. இதற்கு எதிராக செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தை மீண்டும் நாடினார்.

விசாரணையில் நம்பிக்கை இல்லை

இதையடுத்து, அமலாக்கத்துறையின் சம்மனை நிறுத்திவைத்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்,செந்தில் பாலாஜி மீதான பழைய வழக்குகளில் புதிதாக விசாரணை நடத்த உத்தரவிட்டது.

உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜி மற்றும் பாதிக்கப்பட்டோர்கள் என 3 மேல் முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

விசாரணைக்கு அழைத்த சம்மனை ரத்து செய்ததற்கு எதிராக அமலாக்கத்துறையும், பழைய வழக்குகளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி செந்தில் பாலாஜி தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

காவல்துறை விசாரணையில் நம்பிக்கை இல்லை என்பதால் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என பாதிக்கப்பட்ட சிலரும் மேல்முறையீடு செய்தனர்.

செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதற்கான பின்னணி என்ன? முழு விவரம்
செந்தில் பாலாஜி: காதுகளுக்கு அருகே காயம்; ICUவில் சிகிச்சை - என்ன நடந்தது?

அமலாக்கத்துறை நடவடிக்கையில் இறங்க காரணம்?

இந்த வழக்குகளில் கடந்த மே 16ஆம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணா முராரி, ராமசுப்பிரமணியன் அமர்வு, 2 மாதங்களுக்குள் வழக்கை விசாரித்து முடித்து அறிக்கை அளிக்க தமிழ்நாட்டின் மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.

மேலும், பணமோசடி வழக்கு தொடர்பாக விசாரிக்க அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது செல்லாது எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வழக்கு விசாரணையைப் பொறுத்து சிறப்பு புலனாய்வு குழு அமைப்பது தொடர்பாக எதிர்காலத்தில் பரிசீலிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்களிலும் செந்தில் பாலாஜிக்கு எதிராக உத்தரவு வெளியான நிலையில், தற்போது அமலாக்கத்துறை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கொங்கு மண்டல பகுதிகளை குறிவைத்து வேலைகளில் ஈடுபட்டுள்ளது. ஆனால் திமுகவில் கொங்குமண்டல பகுதிகளில் செல்வாக்கு மிக்க நபராக இருக்கிறார் செந்தில் பாலாஜி.

செந்தில் பாலாஜிக்கு அழுத்தம் கொடுப்பதன் வழியாக திமுகவுக்கு அழுத்தம் கொடுக்கிறது பாஜக என அரசியல் விமர்சகர்கள் பேசிவருகின்றனர்.

வட இந்திய எதிர்கட்சிகள் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித் துறை மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதற்கான பின்னணி என்ன? முழு விவரம்
உதயநிதி ஸ்டாலின் : அமைச்சராகிறார் கலைஞர் கருணாநிதியின் பேரன் - அவர் கடந்து வந்த பாதை என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com