
Republic Day
Newssense
இந்திய முழுவதும் 73-வது குடியரசு தின விழா சிறப்பாக நடந்து வருகிறது.சென்னையில் கொரோனா தோற்று பரவல் காரணமாக பொது மக்கள் யாரும் விழாவில் கலந்து கொள்ள வேண்டாம் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது.இதனால் மாணவ,மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளை கூட அரசு ரத்து செய்திருந்தது.இந்த நிலையில் இன்று காலை சென்னை மெரினா கடற்கரையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் குடியரசு தின விழா தொடங்கியது.
ஆர்.என்.ரவி
Newssense
ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடிய ஏற்றுவது இதுவே முதன் முறை.கொடியேற்றத்துக்கு பிறகு வீரர்களின் அணிவகுப்பு நடந்தது.வீரர்கள் செலுத்திய மரியாதையை ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏற்றுக்கொண்டனர்.
விருதுகள்
Newssense
பின்னர் தமிழக அரசு வீரதீர செயலுக்காக வழங்கும் அண்ணா மற்றும் காந்தியடிகள் விருதுகளை தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.பின்னர் சிறந்த காவல் நிலையத்துக்கான விருது வழங்கப்பட்டது.இதில் திருப்பூர் மாநகர காவல் நிலையாத்திற்கு சிறந்த காவல் நிலையம் விருதை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.
அலங்கார ஊர்திகள்
Newssense
விழாவின் முக்கிய அம்சமான அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற ஆரம்பித்தது.விழாவின் தொடக்கத்தில் தமிழக இசைக் கல்லூரி மாணவர்களின் நாதஸ்வர இசை கச்சேரியோடு, முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்தோடு 'காக்கை குருவி எங்கள் ஜாதி ' என்ற வாசகம் பொறிக்கப்பட்ட அலங்கார ஊர்தி சென்றது.
அலங்கார ஊர்திகளில் இடம் பெற்ற தலைவர்களின் சிலைகள்
Newssense
பின்னர் அணிவகுத்துச் சென்ற அலங்கார ஊர்திகளில், வேலுநாச்சியார், மருது பாண்டியர்கள், பாரதியார், வ.உ.சி, வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் அழகு முத்துக்கோன், பெரியார், காயிதே மில்லத், ராஜாஜி, காமராஜர், ரெட்டைமலை சீனிவாசன், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆகியோரின் சிலைகள் இடம்பெற்றன. இறுதியாக அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பின் நிறைவாக 30 நிமிடங்களில் குடியரசு தின விழா நடைபெற்று முடிந்தது.