தமிழ்நாடு : ஆளுநருக்கு தமிழிசை சப்போர்ட்; காண்டான கமல் - முழுமையான பின்னணி என்ன?

தமிழ்நாடு என்ற பெயரை தமிழகம் என சொல்வதுதான் சரியாக இருக்கும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
Tamil Nadu : what is the issue?
Tamil Nadu : what is the issue? Twitter
Published on

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டிலிருந்து ஏற்பாடுகளை மேற்கொண்ட அமைப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது

''தமிழ்நாட்டில் வித்தியாசமான அரசியல் சூழல் நிலவுகிறது எல்லாவற்றிற்கும் நாங்கள் திராவிடர்கள் என்று கூறுகின்றனர். இந்தியா முழுவதும் ஒரு செயல்திட்டம் இருந்தால் தமிழ்நாடு அதை வேண்டாம் என்கிறது

தமிழ்நாடு என்ற பெயரை தமிழகம் என சொல்வதுதான் சரியாக இருக்கும்'' என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல் சமூக வலைதளங்களில் தமிழ்நாடு ஹேஷ்டாக்கை பதிவிட்டு பல்வேறு கருத்துகளை இணையவாசிகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ஆளுநர் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

”ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ள கருத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் பிரிவினைவாத கருத்துகள் வர தொடங்கியுள்ள நேரத்தில், இந்த கருத்தை ஆர்.என்.ரவி பேசியிருக்கிறார்.

இந்தியாவை தன் நாடு என்று அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும். தமிழ்நாட்டை, தனி நாடு என்ற தோற்றத்தில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற அர்த்தத்தில் சொல்லி இருக்கிறார் என்று எடுத்துக் கொள்கிறேன்” என்றார். நாம் அனைவரும் இந்தியாவின் ஒரு அங்கம் தான் என்று தெரிவித்துள்ளார் தமிழசை.

கமல்ஹாசன் பதிலடி

”தமிழ்நாடு வாழ்க” என தமிழ் மட்டுமல்லாது, மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பதிவிட்டுள்ளார் நடிகர் கமல்ஹாசன். அதன் பின்னர் ஆளுநர் பேச்சுக்கும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

”நீண்ட நெடிய போராட்டகளுக்கு பிறகே தமிழ்நாடு என்ற பெயர் நமக்கு கிடைத்துள்ளது. இதனை மாற்ற சொல்வதற்கு ஆளுநர் யார்?

அவருடைய பெயரை ரவி என்பதற்கு பதில் புவி என மாற்ற சொன்னால் மாற்றிக்கொள்வாரா?” என ஆவேசமாக கமல்ஹாசன் கேள்வி எழுப்பியிருந்தார்.

பேரறிஞர் அண்ணா
பேரறிஞர் அண்ணாTwitter

தமிழ்நாடு என்ற பெயர் எப்படி வந்தது?

தமிழ்நாடு என்ற பெயருக்கு ஒரு பெரிய வரலாறே இருக்கிறது. அது சிலப்பதிகாரத்திலிருந்து தொடங்குகிறது.

தமிழ்நாடு என்ற பெயர் சிலப்பதிகாரத்தில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது என்கிறார்கள் தமிழறிஞர்கள். ’இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இது நீ கருதினை ஆயின்’ என்று சேரன் செங்குட்டுவனை சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் புகழ்ந்திருக்கிறார்.

தமிழ்நாடு பெயர் மாற்றத்துக்கான நாடாளுமன்ற விவாதத்தில், தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்தின் மூலம் நீங்கள் எதை அடையப்போகிறீர்கள்?” என்று ஒரு உறுப்பினர் அண்ணாவை நோக்கி கேள்வி எழுப்பினார்.

அதற்கு அண்ணா, “பார்லிமென்ட் என்பதை லோக் சபா என்று பெயர் மாற்றியதன் மூலம் நீங்கள் எதை அடைந்தீர்கள்?

Tamil Nadu : what is the issue?
உதயநிதி ஸ்டாலின் : அமைச்சராகிறார் கலைஞர் கருணாநிதியின் பேரன் - அவர் கடந்து வந்த பாதை என்ன?

கவுன்சில் ஆஃப் ஸ்டேட்ஸ் என்பதை ராஜ்ய சபா என்று மாற்றியதன் மூலம் நீங்கள் எதை அடைந்தீர்கள்? பிரெசிடென்ட் என்பதை ராஷ்டிரபதி என்று மாற்றியதன் மூலம் நீங்கள் எதை அடைந்தீர்கள்? தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்வதால் நீங்கள் எதை இழக்கிறீர்கள்?” என்றார் அண்ணா.

அந்த உறுப்பினரிடம் பதிலில்லை.1967-ல் தி.மு.க வென்று அண்ணா முதல்வர் ஆனார்.1968 ஜூலை 18-ம் தேதி தமிழ்நாடு பெயர் மாற்றத் தீர்மானம் சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பின் நாடாளுமன்றத்தில் நிறைவேறி சட்டமாக்கப்பட்டு 1969 ஜனவரி 14ல் தமிழ்நாடு பெயரானது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com