தமிழகத்தில் அடுத்தடுத்த வெள்ளத்தால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாக்குமரி, தென்காசி என 8 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த மழை வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டுமென்றும் தமிழ் நாட்டுக்கு 21000 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது.
இதற்கு பதிலளித்த நிர்மலா சீத்தாராமன், "4000 கோடி ரூபாய் எங்க போச்சு" என கேள்விகள் எழுப்பியதுடன் தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ள பேரிடரை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என பதிலளித்துள்ளார்.
மேலும், "தென் தமிழக மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது முதல்வர் ஸ்டாலின் இந்தியா கூட்டணி பேச்சுவார்த்தையில் இருந்தார். பேச்சு வார்த்தை முடிந்த பிறகு போகிற போக்கில் பிரமரை சந்தித்தார்" எனவும் நிர்மலா சீத்தாராமன் பேசியிருந்தார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பதிலுக்கு பதிலடி கொடுத்துள்ளனர் தமிழக அரசியல் தலைவர்கள்.
"பேரிடர் நேரத்தில் மக்களுக்குத் தேவை உடனடி உதவி தானே தவிர உபவாசம் அல்ல" என காட்டமாக பதிவிட்டிருந்தார் மதுரை எம்.பி சு. வெங்கடேசன்.
“ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு வைத்துள்ள கோரிக்கை என்பது கடும் பேரிடராக (Calamity of severe nature) அறிவிக்க வேண்டும் என்பதும், ₹21,000 கோடியை நிவாரணமாகத் தர வேண்டும் என்பதும் ஆகும். இந்த இரண்டும் கிடையாது என்பதைத் தான் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவருக்குத் தெரிந்த ஆணவ மொழியில் சொல்லி இருக்கிறார்” என விமர்சித்துள்ளார் தங்கம் தென்னரசு.
மேலும் மத்திய அமைச்சரின் கருத்துகள் தமிழக மக்களை புண்படுத்துவதாக இருக்கின்றன என்றும் விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust