234 சட்டமன்ற தொகுதிகளில் அன்னதானம் வழங்க தமிழக வெற்றிக் கழகம் ஏற்பாடு!
234 சட்டமன்ற தொகுதிகளில் அன்னதானம் வழங்க தமிழக வெற்றிக் கழகம் ஏற்பாடு!Twitter

234 சட்டமன்ற தொகுதிகளில் அன்னதானம் வழங்க தமிழக வெற்றிக் கழகம் ஏற்பாடு!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி, பட்டினியில்லா உலகத்தை ஏற்படுத்த வேண்டும். வருகிற 28.05.2024 அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்துச் சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
Published on

உலகப் பட்டினி தினத்தை முன்னிட்டு வரும் 28ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம் வழங்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என நிர்வாகிகளுக்கு தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி, பட்டினியில்லா உலகத்தை ஏற்படுத்த வேண்டும். அனைவருக்கும் உணவு கிடைத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி, உலகப் பட்டினி தினமான, வருகிற 28.05.2024 அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்துச் சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

மாவட்ட, அணி, நகரம், ஒன்றியம், கிளை மற்றும் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் உரிய தேர்தல் வழிகாட்டும் விதிமுறைகளைப் பின்பற்றிப் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கி, மக்கள் நலப்பணியில் ஈடுபடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

 234 சட்டமன்ற தொகுதிகளில் அன்னதானம் வழங்க தமிழக வெற்றிக் கழகம் ஏற்பாடு!
2024, 2026 தேர்தல்கள் குறித்து விஜய் அறிவித்தது என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews

logo
Newssense
newssense.vikatan.com