Rajinikanth வணங்கிய 'திருவண்ணாமலை' அண்ணாமலையார் கோவில் - ஏன் இவ்வளவு பிரசித்தி?

20 ஆண்டுகளுக்கு முன்பே கிரிவலப்பாதையில் மின்விளக்கு வசதி செய்துகொடுத்தார். ராஜ கோபுரங்களில் அதிக வெளிச்சம் கொண்ட விளக்குகள் அமைக்க அதிக நிதி அளித்தார். அப்படி இந்த கோவிலில் என்னதான் இருக்கிறது எனக் கேட்பவர்கள், இதன் சிறப்புகளை தெரிந்துகொள்ளுங்கள்
Rajinikanth வணங்கிய 'திருவண்ணாமலை' அண்ணாமலையார் கோவில் - ஏன் இவ்வளவு பிரசித்தி?
Rajinikanth வணங்கிய 'திருவண்ணாமலை' அண்ணாமலையார் கோவில் - ஏன் இவ்வளவு பிரசித்தி?Twitter
Published on

லால் சலாம் படபிடிப்புக்காக திருவண்ணாமலை சென்ற ரஜினிகாந்த், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார். 

ஆன்மிக பூமியாக கருதப்படும் திருவண்ணாமலை நடிகர் ரஜினிகாந்துக்கு மிகவும் விருப்பமான தளம். முன்னரே இங்குள்ள கிரிவலப்பாதையில் 14 கிலோ மீட்டர் பயணம் செய்து அண்ணாமலையாரை தரிசனம் செய்துள்ளார்.

20 ஆண்டுகளுக்கு முன்பே கிரிவலப்பாதையில் மின்விளக்கு வசதி செய்துகொடுத்தார். ராஜ கோபுரங்களில் அதிக வெளிச்சம் கொண்ட விளக்குகள் அமைக்க அதிக  நிதி அளித்தார்.

ரஜினிகாந்த் மட்டுமல்ல பல திரைபிரபலங்களும், சமூகத்தில் உயர் அந்தஸ்தில் இருப்பவர்களும் அண்ணாமலையாரின் தீவிர பக்தர்களாக இருக்கின்றனர். அப்படி இந்த அண்ணாமலையார் கோவிலின் சிறப்புகள்தான் என்ன? இங்கு பார்ப்பதற்கு என்னவெல்லாம் இருக்கிறது எனத் தெரிந்துகொள்ளாலாம்.

பிருங்கி என்ற முனிவர் சிவனை மட்டுமே வணங்கி வந்துகொண்டிருந்தார். திருவண்ணாமலையில் தான் பிருங்கி முனிவருக்கு சிவனும் சக்தியும் ஒன்று என்பதை உணர்த்த அர்த்தநாதீஸ்வரர் வடிவம் எடுத்தார் சிவன். 

மேலும் விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் யார் பெரியவர் எனப் போட்டி எழுந்த போது, சிவன் நெருப்பு பிளம்பாக மாறி தனது அடியையும் முடியையும் காண்பவரே பெரியவர் என்றார். இருவராலும் முடியவில்லை. 

அந்த நெருப்பு தான் திருவண்ணாமலையாக மாறியது என்பது நம்பிக்கை. எனவே தான் மலையை சுற்றிவரும் பழக்கமும் இங்கு இருக்கிறது. இந்த கோவில் பிரம்மாண்டமாக 25 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது.

பிரதான கிழக்கு ராஜ கோபுரம்  217 அடி உயரமானது, பேகோபுரம், அம்மணியம்மாள் கோபுரம், திருமஞ்சன கோபுரம், கிளி கோபுரம், வல்லான மகாராஜா கோபுரம் மற்றும் தெற்கு திசையில் உள்ள திருமஞ்சன கோபுரம் என 9 கோபுரங்கள் இருக்கின்றன.

Rajinikanth வணங்கிய 'திருவண்ணாமலை' அண்ணாமலையார் கோவில் - ஏன் இவ்வளவு பிரசித்தி?
Thamel: புத்தர் ஆலயம் முதல் டான்ஸ் க்ளப் வரை - நேபாளத்தின் தூங்காநகரம் பற்றி தெரியுமா?

இக்கோயிலில் அருள்மிகு அண்ணாமலையார் உடனமர் உண்ணாமுலை மூலவராக அமைந்துள்ளனர். மலைவலப்பாதையில் அமைந்துள்ள எழுத்து மண்டபம் ஓவிய கூடமாக திகழ்கிறது. 

சிவனிடம் கோபித்துக்கொண்டு பார்வதி இந்த தலத்துக்கு வந்ததாகவும் அவரது பாதுகாப்புக்காக நந்தியும் உடன் வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை பிரதிபலிப்பதற்காக இந்த கோவிலில் மட்டும் உண்ணாமுலை அம்மன் சந்நதி முன்பு நந்தி இருப்பதைக் காணலாம்.

திருவண்ணாமலையில் 4 விநாயகர் சன்னதிகளும் 4 முருகன் சன்னதிகளும் இருக்கின்றன. இங்குள்ள முருகன் அருணகிரிநாதரால் பாடப்பட்டுள்ளார்.

இந்த கோவில் 1100 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. இந்த கோவிலின் வரலாற்றில் சோழர்கள், பாண்டியர்கள், சம்புவராயர்கள், போசளர்கள், விஜயநகர அரசர்கள், நாயக்க மன்னர்கள், நகரத்தார்கள், குறுநில மன்னர்கள், ஐமின்தார்கள் என பல அரசர்களின் பங்காளிப்பு இருக்கிறது.

Rajinikanth வணங்கிய 'திருவண்ணாமலை' அண்ணாமலையார் கோவில் - ஏன் இவ்வளவு பிரசித்தி?
உலக உணவு தினம்: விஜய் முதல் ரஜினி வரை நம் நட்சத்திரங்களின் விருப்ப உணவு எது தெரியுமா?

இங்கு 100க்கும் மேற்பட்ட சன்னதிகளும், இறைஉருவங்கள், செப்புத்திருமேனிகள், ஓவியங்கள், அழகிய திருச்சுற்றுகள், தீர்த்தக்குளங்கள், ஆயிரக்கால் மண்டபம், வானுயர்ந்த கோபுரங்கள் இக்கோயிலின் சிறப்புகள் ஆகும்.

இங்கு 450க்கும் மேற்பட்ட கல்வெட்டுகளும், ஆயிரக்கணக்கான சிற்பங்களும் உள்ளன. கந்தாஸ்ரமம், பவழக்குன்று, ரமணாஸ்ரமம், கிரிவலப்பாதை, அஷ்டலிங்கங்கள் பார்க்கத்தகுந்த இடங்களாகும்.

திருவண்ணாமலை வெறும் மலைமட்டுமல்ல அதனுள் பிரம்மலோகம் இருக்கிறது என்பது நம்பிக்கை.

Rajinikanth வணங்கிய 'திருவண்ணாமலை' அண்ணாமலையார் கோவில் - ஏன் இவ்வளவு பிரசித்தி?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா : மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com