இன்று தேர்தல் முடிவுகள்... உள்ளாட்சியில் யாருடைய ஆட்சி?

தபால் வாக்குகளில் தொடங்கி, மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணி முடிக்கும் வரை, அனைத்து நடவடிக்கைகளும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல்

தேர்தல்

Twitter

Published on

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் ஒட்டுமொத்தமாக 12,838 உறுப்பினர்களை தேர்வுசெய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், முறைகேடு புகார் காரணமாக, தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் முதல்நிலை பேரூராட்சிக்கான தேர்தல் ரத்துசெய்யப்பட்டது. மேலும், வேட்பாளர்கள் இறப்பு காரணமாக 6 வார்டுகளுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மீதமுள்ள 12,820 பதவிகளுக்கான தேர்தலில் 218 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டனர். ஒரு வார்டில் வேட்பாளர்கள் யாரும் மனுத் தாக்கல் செய்யவில்லை. இதனைத் தொடர்ந்து, மீதமுள்ள இடங்களுக்கு சனிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது.

மொத்தமாக தேர்தலில் 60.7 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியிருக்கின்றன. வாக்குகளை எண்ணுவதற்காக 268 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் மூன்றடுக்கு பாதுகாப்புடன் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது. வாக்கு எண்ணும் அதிகாரிகள் மற்றும் முகவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் எனக் கூறப்படுகிறது. ஒவ்வொரு வார்டுக்கும் இரண்டு அல்லது மூன்று சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும். வெற்றியாளர்கள் உடனுக்குடன் அறிவிக்கப்படுவார்கள்.

தேவையில்லாமல் பிரச்சினை செய்யும் முகவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், தேர்தல் முடிவுகளை கேட்டு அரசியல் கட்சியினர் உட்பட யாராவது வன்முறையில் ஈடுபட்டால் அவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள். அவர்கள் மீது அனைத்து சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று காவல் துறை எச்சரித்துள்ளது.

<div class="paragraphs"><p>தேர்தல்</p></div>
தாய் மொழி தினம் : வெறும் அனுசரிப்பல்ல, தேசிய இனங்களின் உரிமைக்குரல்

தபால் வாக்குகளில் தொடங்கி, மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணி முடிக்கும் வரை, அனைத்து நடவடிக்கைகளும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

திமுக, அதிமுக-வின் கூட்டணி கட்சிகளுக்கு இடையில் பலத்த போட்டி எதிர்பார்க்கப்படுகிறது. திமுக-வின் 8 மாத செயல்பாடுகளுக்கு மக்களின் மதிப்பெண் என்ன? என்பதை இந்த முடிவுகள் காட்டிவிடும். தனித்து கலமிறங்கியிருக்கும் பாஜவிற்கு மக்களிடையே எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்பதையும் இதில் கணித்துவிடலாம். நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகளுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதையும் பார்க்க இந்த தேர்தல் முடிவுகள் மிக முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com