ADMK
ADMKTwitter

Tamil News Today Live : ADMK ஒற்றை தலைமை விவகாரம்: OPS -ஐ எதிர்த்து முழக்கம்

இன்று நடைபெரும் நிகழ்வுகளை உடனுக்குடன் செய்திகளாக தெரிந்துகொள்ளுங்கள்!

பொதுக்குழு கூட்டத்தில் இருந்து இல்லத்திற்கு வரும் வழியில் ஹோட்டலில் மதிய உணவு சாப்பிட்ட ஓ.பி.எஸ்

எடப்பாடியுடன் சி.டி.ரவி, அண்ணாமலை சந்திப்பு

மீண்டும் முதல்வராவார் இபிஎஸ் - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

"அதிமுகவின் அடுத்த பொதுக்குழு வரும் ஜூலை 11ம் தேதி நடைபெறும்" - அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவிப்பு

"புதிய பொதுக்குழு தேதி சொல்லாது" என மேடையில் கூறிவிட்டு ஆவேசமாக வெளியேறினார் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் 

இன்னொரு திருமண மண்டபத்தில் என்ன நடக்கிறது என்பது தெரியும், அந்த பிரச்னைக்கு செல்ல விரும்பவில்லை, தலையிட வேண்டிய அவசியமில்லை - அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனின் இல்ல திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

அரங்கில் தொண்டர்களுக்கிடையே சலசலப்பு ஏற்பட்ட நிலையில், " அனைவரும் ராணுவக் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்; கழகத்தினரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கபடும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

எம்ஜிஆர், ஜெயலலிதா போன்று வேடமணிந்து பொதுக்குழு நடைபெறும் பகுதிக்கு வந்துள்ள அதிமுக தொண்டர்கள்

OPS -ஐ எதிர்த்து முழக்கம்

ஓபிஎஸ் மண்டபத்துக்கு வந்த நிலையில் அவரை வெளியேப் போகச் சொல்லி அதிமுகவினர் முழக்கம். மேடையிலிருந்து இறங்கினார் வைத்திலிங்கம். முன்னாள் அமைச்சர் வளர்மதி இபிஎஸை ஆதரித்துப் பேச்சு.

சற்று நேரத்தில் தொடங்குகிறது பொதுக்குழு

அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் வானகரம் மணடபத்தில் தொடங்குகிறது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் புறப்பட்டுள்ளனர். சாலையின் இருபுறமும் ஆதரவாளர்கள் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை; நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பு அளிக்கிறோம், எடப்பாடி தரப்பில் மேல்முறையீடு செய்வது குறித்து கட்சி முடிவு செய்யும் - ஜெயக்குமார்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் குறித்து பிரேமலதாவிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார் பிரதமர் மோடி

பொதுக்குழுவிற்கான அழைப்பிதழ் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி; பாதுகாப்புப் பணிக்காக சுமார் 2,500க்கும் மேற்பட்ட போலீஸார் குவிப்பு

logo
Newssense
newssense.vikatan.com