போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: தொழிற்சங்கத்தினருடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை!

சற்று நேரத்துக்கு முன் அரசின் நிதிநிலைமை குறித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உடன் பேச்சுவார்த்தை நடத்தினார் அமைச்சர் சிவசங்கர்.
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: தொழிற்சங்கத்தினருடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை!
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: தொழிற்சங்கத்தினருடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை!Twitter
Published on

அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி நாளை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

ஊழியர்கள் அனைவரும் பணிக்கு வரவேண்டும் என போக்குவரத்து கழகம் உத்தரவிட்டும், அறிவித்தபடி வேலை நிறுத்தம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளது தொழிற்சங்கம்.

இதனை முன்னிட்டு ஏற்கெனவே முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தினார் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்.

அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் கோரிக்கைகளை நிறைவேற்றுவதனால் அரசுக்கு அதிக நிதி செலவு ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அரசின் நிதிநிலைமை குறித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உடன் பேச்சுவார்த்தை நடத்தினார் அமைச்சர் சிவசங்கர்.

தற்போது போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் முத்தரப்பு பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com