TTF Vasan : இனிமேல் பைக் ஓட்ட முடியாது! யூடியூபரின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து

இவர் தற்போது கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில், டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ உத்தரவிட்டுள்ளது.
TTF Vasan : இனிமேல் பைக் ஓட்ட முடியாது! யூடியூபரின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து
TTF Vasan : இனிமேல் பைக் ஓட்ட முடியாது! யூடியூபரின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்துTwitter

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் டிடிஎப் வாசன். இவர் Twin throttlers என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.

தனது இருசக்கர வாகனத்தில் நீண்ட தூரம் பயணித்தும், சாகசங்கள் செய்தும் 2கே கிட்ஸ் மனதில் இடம் பிடித்தவர் டிடிஎப் வாசன்.

அதிவேகமாக பைக்குகளில் ட்ராவல் செய்து அதனை வீடியோக்களாக எடுத்து தனது யூடியூப்பில் பதிவிட்டு வருவார்.

யூடியூப்பில் இவருக்கு 30 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் இருப்பதால் அதன் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்தும் வருகிறார் டிடிஎப் வாசன். அவர் அதிவேகமாக பைக் ஓட்டி வீடியோ பதிவிடுவதால் அது அவரது ரசிகர்களை தவறாக வழிநடத்தும் செயல் என எதிர்ப்புகளும் கிளம்பி வந்தது.

இதற்கிடையில் கடந்த மாதம் அதிவேகமாக பைக் ஓட்டி அதில் சாகசம் செய்ய முயன்றபோது விபத்தில் சிக்கினார் டிடிஎப் வாசன்.

டிடிஎஃப் வாசனுக்கு காயம் ஏற்பட்ட நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

TTF Vasan : இனிமேல் பைக் ஓட்ட முடியாது! யூடியூபரின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து
TTF Vasan : திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறாரா பிரபல யூடியூபர்? உண்மை என்ன?
TTF வாசன்
TTF வாசன்Twitter

பின்னர், கைமுறிவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே, அவருடைய பைக் பறிமுதல் செய்யப்பட்டு காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் இயக்கியது, கவனக்குறைவாகச் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இவர் தற்போது கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில், டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ உத்தரவிட்டுள்ளது.

TTF Vasan : இனிமேல் பைக் ஓட்ட முடியாது! யூடியூபரின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து
TTF Vasan : 2K கிட்ஸ்களின் நாயகன் ஆனது எப்படி? இவர் பின்னணி என்ன? - விரிவான தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com