Bigg Boss: ட்விட்டரில் டிரெண்டாகும் ClownAzeem, BoomerVikraman ஹாஷ் டேக் ; என்ன காரணம் ?

ட்விட்டரில் அவ்வப்போது இருவரது பெயரும் டிரெண்டிங்கில் இருக்கும்.
Azeem - Vikraman
Azeem - Vikramanட்விட்டர்
Published on

பிரபல தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் 6 வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதனை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.

இந்த சீசனிலும் வழக்கம்போல சண்டைகளுக்கு சச்சரவுகளுக்கும் குறையில்லை. வழக்கமாக இரண்டு மூன்று வாரங்களில் சூடுபிடிக்கும் போட்டி, இந்த முறை முதல் வாரத்தில் இருந்தே சண்டைகள் நிறைந்ததாக இருந்தது.

அதில் முக்கியமாக அனைத்து போட்டியாளர்களுடனும், நடிகர் அசீம் சண்டையிட்டுக் கொண்டிருக்கும்படியாக இருந்தது. வாரா வாரம் புரோமோவில் வந்துவிடுவார் அசீம்.

ஆனால், இவரது இந்த சண்டையிடும் இயல்புக்காகவே இன்னும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறார். நிகழ்ச்சியிலும் ஓர் தனியிடத்தை பிடித்துவிட்டார்.

இவரைப் போலவே விக்ரமன் என்ற போட்டியாளரும் ஹவுஸ்மேட்ஸுடன் ஏதாவது ஒரு விதத்தில் வாக்குவாதத்தில் இருப்பார்

ட்விட்டரில் அவ்வப்போது இருவரது பெயரும் டிரெண்டிங்கில் இருக்கும். இவர்களுடன் சண்டைப்போடுபவர்கள் பெயரும் டிரெண்டாகும். அதில் தனலட்சுமி, அயிஷத் ஆகியோர் அடக்கம்

இந்நிலையில், தற்போதும் இவர்களது பெயர் டிரெண்டிங்கில் உள்ளது.

Azeem - Vikraman
Bigg Boss நிகழ்ச்சியில் ஒரு அரசியல்வாதி - யார் இந்த விக்ரமன்?

ட்விட்டரில் தற்போது Clown Azeem, Boomer Vikraman என்ற இரு ஹாஷ் டேக் டிரெண்டாகி வருகிறது. நிகழ்ச்சியின் தொடக்கம் முதலே எலியும் பூனையுமாக இருந்த இருவரும், சமயத்தில் ஒன்றாக உட்கார்ந்து பேசும் காட்சிகளையும் காணலாம். ஆனால் அடுத்த நிமிடமே சண்டை மூளும்.

அசீம் மற்றும் விக்ரமன் தங்களது கருத்துகளை விடாது முன்வைத்துவரும் நிலையில், இவர்களில் யாருக்கு ஆதரவு அதிகம் என்ற ஃபேன் வார் தொடங்கியுள்ளது.

இருவருமே இந்த வாரம் எவிக்‌ஷன் நாமினேஷனில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரில் ஒருவருக்கு தான் டைட்டில் என்ற பேச்சுகளும் நிலவி வருகிறது

Azeem - Vikraman
Bigg Boss மகேஸ்வரி டு டிடி - விவாகரத்து பெற்று தனியாக வாழும் விஜய் டிவியின் 5 பிரபலங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com