ரஷ்ய உக்ரைன் சுற்றுலாப் பயணிகளுக்கு அடைக்கலம் கொடுத்த தமிழர்

சத்யனின் 14 அறைகள் கொண்ட விடுதியில் 11 அறைகள் நிரம்பிவிட்டன. இனிமேலும் பயணிகள் தவித்துக்கொண்டிருந்தால் அவர்களுக்கு உதவுவேன் என்று கூறுகிறார் இந்த ஆச்சரிய மனிதர்.
ரஷ்ய உக்ரைன் சுற்றுலாப்பயணிகளுக்கு அடைக்கலம் கொடுத்த தமிழர்

ரஷ்ய உக்ரைன் சுற்றுலாப்பயணிகளுக்கு அடைக்கலம் கொடுத்த தமிழர்

NewsSense

திருவண்ணாமலை, ஆன்மிக அனுபவத்திற்கான திருத்தலம். அதேசமயம் அங்கு கருணை கொண்ட ஏராளமான இதயங்களும் உள்ளன என்பதை நிரூபித்திருக்கிறது அங்கு நடந்துள்ள சம்பவம். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர்தொடுத்துள்ளது அனைவரும் அறிந்த செய்தி. இதன் காரணமாக , அந்நாடுகளைச் சேர்ந்த பல சுற்றுலாப் பயணிகள், அவர்களது நாடுகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வருவது நாம் அறியாத வேதனைச் செய்தி.

<div class="paragraphs"><p>ரஷ்ய உக்ரைன் சுற்றுலாப்பயணிகளுக்கு அடைக்கலம் கொடுத்த தமிழர்</p></div>
Ukraine War : அமெரிக்காவிலிருந்து சென்று உக்ரைனில் சிக்கியிருந்த மகளை மீட்ட தந்தை !

இப்படி கையறு நிலையில் நின்ற பதினாறு ரஷ்ய உக்ரைன் பயணிகளுக்கு தனது விடுதியில் அடைக்கலம் கொடுத்துள்ளார் திருவண்ணாமலையைச் சேர்ந்த விஎஸ் சத்யன் கோபாலன். அண்ணாமலையார் கோவில் அருகே எப்படி நாடு திரும்புவது என தெரியாமல் அழுதபடி நின்ற இரு வெளிநாட்டுப்பயணிகள் பார்த்திருக்கிறார். உடனே அவர்களைப் பற்றி விசாரித்து, மொத்தமாக 21 பயணிகளையும் தனது விடுதியில் தங்க வைத்து பராமரித்து வருகிறார். இப்படி ஒருவாரமாக உதவி பெற்று வருபவர்களில் பதினாறு ரஷ்யர்களும், ஆறு உக்ரேனியர்களும் உண்டு.

சத்யனின் 14 அறைகள் கொண்ட விடுதியில் 11 அறைகள் நிரம்பிவிட்டன. இனிமேலும் பயணிகள் தவித்துக்கொண்டிருந்தால் அவர்களுக்கு உதவுவேன் என்று கூறுகிறார் இந்த ஆச்சரிய மனிதர். பயணிகளுக்கு தேவையான உணவுப்பொருட்களையும் தனது நண்பர்கள் மூலமாக பெற்று கொடுத்துள்ளார். மன அழுத்தத்திற்கு உள்ளான உக்ரேனிய பயணிகளுக்கு, இரண்டு ரஷ்ய மருத்துவர்கள் உளவியல் தெரபி வழங்கி வருகின்றனர்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com