சினிமா நடிகையும், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரமபலமானவருமான வனிதா விஜயகுமார் சமீபத்தில் வெளியிட்டுள்ள ட்வீட் ஒன்று வைரலாகி வருகிறது.
இவர் ராஜீவ்காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கே.எஃப்.சி சிக்கன் வாங்கி சாப்பிட்டுள்ளார்.
கே.எஃப்.சி-யின் சேவையால் ஏமாற்றம் அடைந்த வனிதா விஜயகுமார் தனது புகாரை ட்வீட்டாக பதிவிட்டுள்ளார்.
அந்த ட்வீட்டில், "மிகவும் மோசமான உணவு மற்றும் சேவை" எனக் குறிப்பிட்டு கே.எஃப்.சி இந்தியா ட்விட்டர் பக்கத்தை ட்வீட் செய்துள்ளார்.
மேலும் கே.எஃப்.சி-யின் வாடிக்கையாளர் சேவையும் மோசமாக இருப்பதாக கூறியுள்ளார் வனிதா.
"உலகிலேயே மிகவும் சிறிய சிக்கன் இறக்கைகள் மற்றும் பீஸ்கள்.. இது சிக்கனா இல்லை காக்காவா..." எனவும் கேட்டுள்ளார்.
இறுதியாக, "இந்தியர்களை மிகவும் பெறுமையாக உணரவைக்கிறீர்கள்" எனவும் நூதனமாக சாடியுள்ளார்.
இந்த ட்வீட்டில் தங்களது பிரச்னையை தனிப்பட்ட மெஸ்ஸேஜில் சொல்லுமாறு கமண்ட் செய்துள்ளது கே.எஃப்.சி இந்தியா.
பிக்பாஸ் மூலம் பிரபலமான வனிதா விஜயகுமார் இப்போது சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். இணைய காணொளிகளில் பங்கேற்றும், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இயங்கியும் வருகிறார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust