வெண்ணிலா கபடிக் குழு நடிகர் ஹரி வைரவன் காலமானார் - திரைத் துறையினர் இரங்கல்!

வெண்ணிலா கபடிக் குழுவில் இவரது நடிப்பு பலரது கவனத்தை ஈர்த்தது. ஏற்கனவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஹரிவைரவனுக்கு கிட்னியிலும் பிரச்னை இருப்பதாக கடந்த பிப்ரவரி மாதம் கூறப்பட்டது.
ஹரி வைரவன்
ஹரி வைரவன்ட்விட்டர்
Published on

வெண்ணிலா கபடிக்குழு திரைப்படத்தில் நடித்த ஹரி வைரவன் என்ற நடிகர் உடல்நலக் குறைவால் தனது 38 வயதில் காலமானார்.

குடும்பத்தை ஒற்றை ஆளாக காப்பாற்றிவந்த தன் கணவர் உயிரிழந்துள்ள நிலையில், நடிகர் ஹரியின் மனைவி கவிதா தங்களுக்கு உதவி புரியுமாறு, நடிகர் சங்கத்திடம் கோரிக்கை வைத்துள்ளார். நடிகர் ஹரிக்கு யோஷினிஸ்ரீ என்ற 2 வயது மகள் இருக்கிறார்.

மதுரையை சேர்ந்த ஹரிவைரவன் விஷ்ணு விஷால் நடித்த வெண்ணிலா கபடிக் குழு 1 மற்றும் 2, குள்ளநரிக் கூட்டம், கார்த்தியுடன் நான் மகான் அல்ல உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

வெண்ணிலா கபடிக் குழுவில் இவரது நடிப்பு பலரது கவனத்தை ஈர்த்தது.

ஏற்கனவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஹரிவைரவனுக்கு கிட்னியிலும் பிரச்னை இருப்பதாக கடந்த பிப்ரவரி மாதம் கூறப்பட்டது. இவருக்கு திரையுலக பிரபலங்கள் சிலர் நிதியுதவி செய்தனர்.

இந்நிலையில், நேற்று இரவு 12.30 மணியளவில் ஹரி வைரவன் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இவரது உடல் மதுரையில் கடச்சனேந்தல் முல்லைநகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

ஹரிவைரவன் மட்டுமே சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றி வந்ததாகவும், அவரது மறைவுக்கு பின்னர் நிற்கதியாக நிற்பதாக கண்ணிர்மல்க உதவிக் கேட்டுள்ளார் அவரது மனைவி. தற்போது உடைந்த ஓட்டு வீட்டில் வசித்துவருவதகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு நடிகர் சங்கம் பொருளாதார ரீதியாக தங்களுக்கு உதவிகளை செய்து கொடுக்க வேண்டும் என ஹரிவைரவனின் மனைவி மற்றும் அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நடிகர் ஹரிவைரவனின் மறைவுக்கு நடிகர்கள் விஷ்ணுவிஷால், திரைப்பட இயக்குநர் பாலாஜி மற்றும் நடிகர்கள் அம்பானி சங்கர், பிளாக் பாண்டி உள்ளிட்டோர் தொலைபேசியில் தொடர்புகொண்டு இரங்கல் தெரிவித்தனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com