விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை!

விரைவில் அரசியல் கட்சி தொடங்க விஜய் மக்கள் இயக்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை!
விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை!Twitter

நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார். மாணவ, மாணவிகளுக்கு பயிலகம்,ம்கல்வி ஊக்கத்தொகை, குழந்தைகளுக்கு சத்துணவுகள் என பல விஷயங்கள் மக்கள் இயக்கம் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது.

அரசியல் கட்சிகளில் இருப்பது போல் இயக்கத்திலும் தனி தனி அணிகள் பிரிக்கப்பட்டு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்தில் புயல் மழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கு விஜய் நேரில் சென்று பொதுமக்களுக்கு உதவித்தொகை மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கினார்.

இந்நிலையில் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகளுடன் விஜய் இன்று திடீர் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் இருந்து மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த திடீர் கூட்டம் பாராளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் என தகவல்கள் கூறுகின்றன. விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற நடிகர் விஜய் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளிவந்த நிலையில் விரைவில் அரசியல் கட்சி தொடங்க விஜய் மக்கள் இயக்கம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை!
விஜய் : நிவாரண பொருட்கள் வழங்கிய நடிகர் - பதிலுக்கு அன்பை பகிர்ந்த நெல்லை மக்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com