கலைஞர் 100 - கலைஞரும் விகடனும் நூல் வெளியீட்டு விழா கலைவாணர் அரங்கில் நடக்கிறது. சிறப்பு விருந்தினர் கமல் ஹாசன், மற்றும் முதல்வர் ஸ்டாலின் அரங்கத்திற்கு வருகைதந்துள்ளனர். இவர்களை தவிர திமுக அமைச்சர்கள் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் வருகை தந்துள்ளார்
கலைஞர் - விகடன் என்ற நான்கு எழுத்துகள் கொண்ட இரு சொற்களும் திருமணமான தம்பதிகள் போல உறவு கொண்டது!
கலைஞர் 100 - விகடனும் கலைஞரும் நூலின் முதல் பிரதியை முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட, சிறப்பு விருந்தினர் நடிகர் கமல் ஹாசன் பெற்றுக்கொண்டார்
அரசியலில் ஊடகங்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை கலைஞரைத் தவிர நன்றாக அறிந்தவர் வேறுயாருமில்லை. அந்த வகையில் நான் கலைஞரின் ரசிகன்.
கொள்கையிலே வேறுபாடு இருந்தாலும், அதைச் சொல்கையிலே பண்பாடு தேவை, என்று செய்கையிலே காட்டியவன் விகடன் தானே - கலைஞரின் கவிதையை மேற்கோள்காட்டிய கமல்ஹாசன்
ஆலமரத்தின் அடியில் விருட்சங்கள் வளராது எனும் பொதுக் கூற்றை முறியடித்து தானும் ஒரு விருட்சமாக வளர்ந்துகொண்டிருப்பவர் முதல்வர் ஸ்டாலின் - கமல்ஹாசன் புகழாரம்
நடிக்க வருபவர்களை கலைஞரின் வசனத்தை பேச சொல்வார்கள். வாய் சுத்தம் பார்ப்பதே அவரின் வசனங்களை வைத்து தான்.
நடிக்க வரும் பலருக்கு கலைஞர் தான் கேட் பாஸ். எனக்கு உள்பட
சட்டம் என் கையில் படத்தை இயக்கி தயாரித்த டி என் பாலு, சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்டுவிட்டார்
கலைஞரின் சந்தோஷத்துக்காக நான் குள்ள அப்புவாக வந்து அபூர்வ சகோதரர்கள் படத்துக்கு அவரிடம் பரிசு வாங்கினேன். ஒரு குழந்தையாகவே மாறிட்டார். உன்னால வர முடியுமா? நான் வரட்டா என்று கேட்டார்
மருதநாயகம் விழாவில் கலைஞானி என்ற பட்டத்தை கலைஞர் எனக்கு கொடுத்தார். அந்த பெயர் நிலைத்துவிட்டது
நடந்த தவறுகளை இங்கே சொல்ல முடியாது, சொல்வது சரியல்ல. ஆனால் எல்லாம் சரி செய்யப்படும்
கலைஞரும் 100 - கலைஞரும் விகடனும் புத்தகத்துக்கு அணிந்துரை கேட்டனர். ஆனால் இதையெல்லாம் பார்ப்பதற்கு கலைஞர் இல்லையே என்ற கவலை தான் என்னை ஆட்கொண்டிருக்கிறது.
ஆனால் அவருடைய அன்பு மகன் நான் இருக்கிறேன், இதை பார்த்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.