புதுக்கோட்டை மாவட்டத்தில் இப்படி ஒரு கடற்கரையா? பட்ஜெட் Spot-க்கு Trip செல்ல தயாரா?

கடற்கரையையொட்டி விநாயகர் கோவில் ஒன்று இருக்கிறது. கடற்கரையில் பெரிய அலைகள் இல்லையென்றாலும் அலைகள் காலை தீண்டி செல்லும்.
visit to kodikkarai beach in pudukkottai district
visit to kodikkarai beach in pudukkottai districtTwitter
Published on

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க கோவில்கள் இருப்பது நாம் அறிந்ததே, ஆனால் கடற்கடை இருப்பது குறித்து உங்களுக்கு தெரியுமா?

புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைதியாக அமைந்திருக்கிறது மணமேல்குடி கடற்கரை. மணமேல்குடி பொதுவாக அந்த சுற்றுவட்டாரத்தில் இருப்பவர்களுக்கு தெரியும்.

மணமேல்குடி பேருந்து நிறுத்தத்திற்கு அருகே ஒரு தார் சாலை இருக்கும். அந்தப் பாதையின் வழியே சென்றால் நம் கண்ணிற்கு முந்திரி, தைலமரக்காடுகள் தென்படும்.

அப்படியே சற்றுதூரத்தைக் கடந்து செல்ல சிலு சிலுவென்று பூங்காற்று என அங்கு இருக்கும் கடற்கரை காற்று உங்களை வரவேற்கும்.

அந்த அமைதியான சூழல் நிச்சயம் உங்களுக்கு மன அமைதியை கொடுக்கும்.

அந்த பகுதிக்குள் நுழையும்போதே நூற்றுக்கணக்கான நாட்டுப்படகை நீங்கள் காணலாம்.

visit to kodikkarai beach in pudukkottai district
Summer vacation : வெறும் 30 ரூபாய் போதுமா? கிருஷ்ணகிரியில் இருக்கும் சூப்பர் பட்ஜெட் Spot

கடற்கரையையொட்டி விநாயகர் கோவில் ஒன்று இருக்கிறது. கடற்கரையில் பெரிய அலைகள் இல்லையென்றாலும் அலைகள் காலை தீண்டி செல்லும்.

இங்கு அதிகாலையிலிருந்து காலை 10 மணி வரையிலும் பிரெஸ்சான மீன்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

கடற்கரையையொட்டி சுமார் 5 கி.மீ தொலைவிற்கு தீவு போன்று இயற்கையாகவே அமைந்த அலையாத்தி காடுகளும் அமைந்திருக்கிறது. அந்த காடுகளையும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கலாம்.

visit to kodikkarai beach in pudukkottai district
தர்மபுரியில் இருக்கும் 'மினி ஊட்டி'- பட்ஜெட் Spot-க்கு Trip செல்ல ரெடியா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com