தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி யார்? போட்டிப் போடும் பாஜக, காங்கிரஸ்

திமுகவிற்கு அடுத்த இடத்தை அதிமுக பிடித்திருந்தாலும் இரு கட்சிகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகமாயிருந்தது. இந்நிலையில் மூன்றாவது பெரிய கட்சி என்கிற அந்தஸ்துக்காக காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் போட்டிப்போடுகின்றன.
BJP vs Congress

BJP vs Congress

Twitter

Published on

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளன. ஆளும் கட்சியான திமுக இந்தத் தேர்தலில் மாபெரும் வெற்றியினைப் பெற்றுள்ளது. சிறிய கட்சிகளான கமல்ஹாசனின் மநிம மையம் ஒரு வார்டு கூட வெல்லாமல் ஏமாற்றம் அடைந்தது. நாம் தமிழர் கட்சியும் சொல்லிக்கொள்ளும் அளவிலான வெற்றியைப் பெறவில்லை.

திமுகவிற்கு அடுத்த இடத்தை அதிமுக பிடித்திருந்தாலும் இரு கட்சிகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகமாயிருந்தது. இந்நிலையில் மூன்றாவது பெரிய கட்சி என்கிற அந்தஸ்துக்காக காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் போட்டிப்போடுகின்றன.

“நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் -

3வது பெரிய கட்சியாக மீண்டும் உருவெடுத்தது காங்கிரஸ் கட்சி.

73 மாநகராட்சி

15 நகராட்சி

368 பேரூராட்சி வார்டுகளில் வெற்றி”

எனத் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தது காங்கிரஸ் கட்சி.

இதற்கு மாறாக, “ தமிழக பாஜக இதுவரை மக்கள் பிரதிநிதிகள் இல்லாத பகுதிகளில் இன்று வெற்றி பெற்றுள்ளது. அதிகாரப்பூர்வமாகத் தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுகவுக்கு அடுத்தபடியாக 3வது பெரிய கட்சியாக நாங்கள் இருக்கிறோம். எங்கள் துணிச்சலான மற்றும் கடின உழைப்பாளிகளின் களப்பணிக்காகவும், அவர்களின் உத்வேகத்திற்காகவும் எங்கள் தலைவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி” எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை.

பாஜக பல இடங்களில் முதன்முதலாக உள்ளாட்சி பிரதிநிதிகளை வென்றிருக்கிறது. ஆனால் எண்ணிக்கை அளவில் அது காங்கிரஸை விடக் குறைவுதான். எனவே காங்கிரஸ் தான் பிரதிநிதிகள் அடிப்படையில் தமிழகத்தின் மூன்றாவது கட்சியாக உள்ளது. எனினும் காங்கிரஸ் திமுக கூட்டணியிலிருந்ததாலும், பாஜக தனித்துப் போட்டியிட்டதாலும் பாஜக தங்களைப் பெரிய கட்சியாகக் கூறிக்கொள்கின்றது.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com