டிக்டாக் டு பிக்பாஸ்: மக்கள் மனம் வென்ற இந்த ஜி.பி முத்து யார்?

இவரது நெல்லைத் தமிழ் அந்த வசைகளை இன்னும் நகைச்சுவையாக்கின. பின்னர் இவரும் மற்றொரு டிக் டாக் பிரபலமான ரவுடி பேபி சூர்யாவும் இணைந்து பல வீடியோக்களை பதிவிட்டனர்.
ஜி பி முத்து
ஜி பி முத்துட்விட்டர்
Published on

டிக் டாக் மூலம் அறிமுகமாகி பலரது மனதை வென்றவர்கள் பட்டியலில் ஜி பி முத்துவிற்கு ஒரு தனி இடம் உண்டு. இவரது நகைச்சுவையான பேச்சும் தென்னகத்து தமிழும் தற்போது அனைவருக்கும் அத்துப்படி.

அன்றாடம் நம் நண்பர்களுடன் பேசும்போது எப்படி வடிவேலுவின் டயலாக்குகள் நம்மை அறியாமல் வருகிறதோ, அப்படி இவர் பயன்படுத்தும் சொற்களும் தனிச்சையாக பயன்பட தொடங்கிவிட்டன.

'வணக்கம் மக்களே, செத்த பயலுவலா, ஏலே நீ ஒரு ஆர்டிஸ்டுன்னு நிரூபிச்சுட்டலே' போன்றவை அதிக பிரபலம்.

டிக்டாக் மூலம் பிரபலமடைந்த இவரை கடந்த இரண்டு வருடங்களாகவே பிக் பாஸில் எதிர்பார்த்து வந்தனர்.

இந்நிலையில், நடப்பு சீசனில் (பிக் பாஸ் 6) முதல் போட்டியாளராக வந்திருக்கிறார் ஜிபி முத்து.

மக்களின் பேராதரவில் திளைத்துக்கொண்டிருக்கும் இந்த சோசியல் மீடியா பிரபலம் யார்?

ஜி பி முத்து என்கிற கணேசன் பேச்சிமுத்து தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி என்ற இடத்தை சேர்ந்தவர். தன் தந்தையின் நகை கடையில் வேலைப் பார்த்து வந்தவர் பின்னர் தச்சராக இருந்தார்.

அந்த தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் இவரை மனமுடைய செய்தது. அதிலிருந்து விடுபடவே அப்போது பிரபலமாக இருந்த டிக் டாக்கில் வீடியோக்களை பதிவிட தொடங்கினார். ஒரு நாளைக்கு 10 முதல் 15 வீடியோக்களை பதிவிட்டார் ஜி பி முத்து. நாள் ஆக ஆக, அது ஒரு நாளைக்கு 75 வீடியோவாக அதிகரித்தது.

குறுகிய காலத்தில் அதிக ஃபாலோவர்கள்:

வெகு சில நாட்களிலேயே அதிக ஃபாலோவர்களை பெற்றார் முத்து. திரைப்பட பாடல்களுக்கு வேடிக்கையான பாவனைகளுடன் வாயசைத்தே ரசிகர்கள் மனதை வென்றார். முதலில் இவரது நடவடிக்கைகளை விமர்சித்து, திட்டி இவருக்கு கமென்ட்டுகள் வந்தன. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் டிக் டாக் வீடியோக்கள் செய்து வந்தார் முத்து.

இவரது நெல்லைத் தமிழ், அந்த வசைகளை இன்னும் நகைச்சுவையாக்கின. பின்னர் இவரும் மற்றொரு டிக் டாக் பிரபலமான ரவுடி பேபி சூர்யாவும் இணைந்து பல வீடியோக்களை பதிவிட்டனர்.

வந்தது தடை:

ஆனால், சில நாட்களிலேயே முத்துவின் மகிழ்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவது போல வந்தது ஒரு செய்தி! இந்தியா சீன செயலியான டிக் டாக்கை தடை செய்வதாக அறிவித்தது. கூடவே, ரவுடி பேபி சூர்யா மீதும் இவர் மீதும் அவதூறு வழக்குகள் தொடுக்கப்பட்டன

டிக் டாக் தடையால் பெரிதும் பாதிக்கப்பட்டார் ஜிபி. டிக் டாக் என்ற தளம் தானே என்னை இந்த உலகுக்கு அறிமுகப்படுத்தியது? அதன் மூலம் தான் நான் மீண்டும் சிரித்தேன் எனக் கூறினார். இவற்றுடன் கொரோனா பெருந்தொற்றும் சேர்ந்துகொள்ளவே, குடும்பத்தில் நிதிநிலை பெரிதும் பாதிக்கப்பட்டது.

தற்கொலை முயற்சி:

வீட்டில் உள்ளவர்களை கவனித்துக் கொள்ள முடியாததால் தற்கொலைக்கு கூட முயற்சித்ததாக அவர் மற்றொரு வீடியோவில் தெரிவித்தார். உடல் நலம் தேறி அவர் வீடு திரும்பியதும் அவருக்கு கடிதம் ஒன்று வந்தது. , அந்த கடித்தத்தை படிக்கும் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டார். அதுவே அவரது யூடியூப் சேனலுக்கு அடிதளமாக அமைந்தது.

யூடியூப் சேனல்:

ஜிபி முத்து ஒரு யூடியுப் சேனலை தொடங்கினார். இவருக்கு வரும் கடிதங்களை படித்து அதற்கு பதிலளித்து, கடிதம் எழுதியவர்களை திட்டி, அதை வீடியோவாக பதிவிட்டார். வேடிக்கையான கன்டன்டுகளை யூடியூபிலும் செய்து வர, வெறும் 4 மாசத்தில் 7 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் கிடைத்தனர் முத்துவிற்கு. இதன் மூலம் சம்பாதிக்க துவங்கியவர், 2021ல் புதிய ஹுண்டாய் கார் ஒன்றையும் வாங்கினார்.

பிக் பாஸ்:

தற்போது அவரது யூடியூப் சேனலுக்கு 1.29 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள். இவர் தன் மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார்.

மேலும், இறந்த தன் இளைய சகோதரரின் குழந்தைகளையும் வளர்த்து வருகிறார் ஜிபி. நான்கு படங்களில் நடித்துள்ளதாக கூறியுள்ள ஜிபி முத்து, தற்போது அனைவரும் எதிர்பார்த்தது போல பிக் பாஸில் கால் பதித்துள்ளார்

ஜி பி முத்து
பொன்னியின் செல்வன்: யார் இந்த நந்தினி? சோழர்களுக்கும் இவருக்கும் என்ன பகை?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com