முருகன் அசுரர்களை அழிக்க தனது தாயர் பார்வதியிடம் வேலை பெற்ற தினமே தைப்பூசமாக கொண்டாடப்படுகிறது.
இந்த தைப்பூச நாளில் விரதமிருந்து முருகனை வணங்கினால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை. எனவே வாழ்வில் வெற்றியும், முன்னேற்றமும், ஞானமும் கிடைக்க முருக பக்தர்கள் பலரும் தைப்பூச விழாவினை கோலாகலமாக கொண்டாடினர்.
பல நூறு ஆண்டுகளாக கொண்டாடப்படும் இந்த நாளில் தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற முருகன் கோவில்களில் பகதர்கள் கூட்டம் அலை மோதியது.
ஆறு படை வீடுகளில் முக்கியத்தளமான பழனியில் பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி முருகனை நேற்று வழிபட்டனர்.
அதுமட்டுமல்லாது முருகனின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய இடங்களில் பகதர்களின் கூட்டம் அலை மோதியது. ”அரகோரா கோஷம்” விண்ணை முட்டியது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust