உலக முதலீட்டாளர் மாநாடு : தென்மாவட்டங்களில் முதலீடு செய்யும் டாடா நிறுவனம்!
உலக முதலீட்டாளர் மாநாடு : தென்மாவட்டங்களில் முதலீடு செய்யும் டாடா நிறுவனம்!Twitter

உலக முதலீட்டாளர் மாநாடு : தென்மாவட்டங்களில் முதலீடு செய்யும் டாடா நிறுவனம்!

சென்னை உலக முதலீட்டாளர் மாநாட்டில் சுமார் 5.5லட்சம் கோடி மதிப்புக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் டாடா பவர் நிறுவனம் முதலீடு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

உலக முதலீட்டாளர் மாநாடு சென்னையில் நடைபெறவுள்ளது. இதனால் தமிழகத்தில் முதலீடு செய்ய நிறுவனங்கள் முன்வந்துள்ளன. அடிடாஸ், டாடாவின் ஐஃபோன் தயாரிப்பு ஆலை, தி போயிங் கம்பனி பற்றிய செய்திகள் வெளியாகியிருந்தது.

சென்னை உலக முதலீட்டாளர் மாநாட்டில் சுமார் 5.5லட்சம் கோடி மதிப்புக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

டாடா பவர், செம்கார்ப் நிறுவனங்கள் தென்மாவட்டங்களில் முதலீடு செய்கின்றன. இவை புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி அடிப்படையிலான நிறுவனங்களாகும். இவற்றின் மூலம் தென் மாவட்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும் எனக் கூறப்படுகிறது.

ஒசூரில் விரிவாக்கம் செய்யப்படும் டாடாவின் ஐஃபோன் தயாரிப்பு ஆலையின் மதிப்பு 7000 கோடி எனவும் இதனால் 30000 வேலை வாய்ப்புகள் உருவாகும் எனவும் கூறப்படுகிறது.

வட மாவட்டங்களில் ஸ்டெல்லாண்டஸ் நிறுவனமும், மகிந்திரா குழுமத்தின் சுற்றுலா தொடர்பான நிறுவனமும் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படுகிறது.

உலக முதலீட்டாளர் மாநாடு : தென்மாவட்டங்களில் முதலீடு செய்யும் டாடா நிறுவனம்!
ரத்தன் டாடா: சொகுசு கார் முதல் பிரைவேட் ஜெட் வரை - ஆடம்பர வாழ்க்கை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com