டிடிஎஃப் வாசன் : பயங்கரமான சாலை விபத்தில் சிக்கிய பிரபல யூடியூபர் - என்ன நடந்தது? |Video

டிடிஎஃப் வாசன் தற்போது பயங்கரமான சாலை விபத்து ஒன்றில் சிக்கியிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
டிடிஎஃப் வாசன் : பயங்கரமான சாலை விபத்தில் சிக்கிய பிரபல யூடியூபர் - என்ன நடந்தது?
டிடிஎஃப் வாசன் : பயங்கரமான சாலை விபத்தில் சிக்கிய பிரபல யூடியூபர் - என்ன நடந்தது?Twitter

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் டிடிஎப் வாசன். இவர் Twin throttlers என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.

தனது இருசக்கர வாகனத்தில் நீண்ட தூரம் பயணித்தும், சாகசங்கள் செய்தும் 2கே கிட்ஸ் மனதில் இடம் பிடித்தவர் டிடிஎப் வாசன்.

அதிவேகமாக பைக்குகளில் ட்ராவல் செய்து அதனை வீடியோக்களாக எடுத்து தனது யூடியூப்பில் பதிவிட்டு வருவார்.

TTF வாசன்
TTF வாசன்Twitter

இந்தநிலையில் டிடிஎஃப் வாசன் தற்போது பயங்கரமான சாலை விபத்து (Road Accident) ஒன்றில் சிக்கியிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிடிஎப் வாசன் அம்பத்தூரில் உள்ள அவரது வீட்டில் இருந்து மகாராஷ்டிராவிற்கு பைக்கில் சென்றிருக்கிறார். அதன்படி சென்னை- பெங்களூரு சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஒரு காரை முந்தி செல்ல வேண்டிய நிலையில்,வீலிங் செய்ய முயன்றபோது அவரது பைக் கட்டுப்பாட்டை இழந்து, விபத்துக்குள்ளது.

டிடிஎஃப் வாசனுக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் கையில் முறிவு ஏற்பட்டது.

பின்னர், கைமுறிவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே, அவருடைய பைக் பறிமுதல் செய்யப்பட்டு காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் இயக்கியது, கவனக்குறைவாகச் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

டிடிஎஃப் வாசன் : பயங்கரமான சாலை விபத்தில் சிக்கிய பிரபல யூடியூபர் - என்ன நடந்தது?
TTF Vasan : 2K கிட்ஸ்களின் நாயகன் ஆனது எப்படி? இவர் பின்னணி என்ன? - விரிவான தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com