தொண்டையில் மோமோஸ் சிக்கி ஒருவர் உயிரிழப்பு - எய்ம்ஸ் மருத்துவர்கள் எச்சரிக்கை

50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மோமோஸை மென்று உண்ணாமல் அப்படியே விழுங்கியதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
momos
momosCanva
Published on

பீட்சா, பர்கர், ஷவர்மா போன்ற மேற்கத்திய உணவுகளின் வரிசையில் தற்போது மக்கள் மோமோஸையும் அதிகம் உண்டு வருகின்றனர்.

டார்ஜிலிங், லடாக், சிக்கிம், அசாம், உத்தராகண்ட், இமாச்சல பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பிரபலமடைந்து தற்போது தென் தமிழகத்தின் கடைக்கோடி வரை மோமோஸ் விற்பனை களைகட்டியுள்ளது.

கொழுக்கட்டை போன்று ஆவியில் வேக வைத்து செய்யப்படும் மோமோஸ், சிக்கன், காய்கறி என பலவகை ஸ்டஃப்புகளை கொண்டிருக்கும். இது வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பி உண்ணும் வகையில் செய்து தரப்படுகிறது.

Momos
Momoscanva

வாயில் வைத்தவுடன் வழுக்கிக்கொண்டு வயிற்றுக்குள் செல்லும்படி அதன் செய்முறை இருக்கிறது.இதனால் சிலர் இதனை மென்று உண்ணாமல் அப்படியே விழுங்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மோமோஸை அப்படியே விழுங்கியதால் தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

momos
வெயிலை சமாளிக்க என்னென்ன சாப்பிடலாம்? எவற்றை தவிர்க்கலாம்
Momos
MomosCanva

இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரி கூறுகையில்,

துரித உணவுகளை சுவைக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அதனை பாதுகாப்பான முறையில் மக்கள் சாப்பிட வேண்டும். மோமோஸ் போன்ற உணவுகளை மென்று சாப்பிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

சமீபத்தில் மீன்பிடிக்கச் சென்ற நபரின் தொண்டையில் மீன் நேரடியாக சிக்கிக் கொண்ட சம்பவம் மருத்துவரையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

momos
யானை சாணத்திலிருந்து எடுக்கப்பட்ட காபி கொட்டை - இவ்வளவு விலையா? - பாகம் 1

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnew

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com