பயணி விட்டு சென்ற ஏர்பாடை அவரது அலுவலகம் தேடி சென்று ஒப்படைத்த பெங்களூரு ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
மறதியின் காரணமாகவோ கவனக்குறைவாலோ நம் உடைமைகளை நாம் பல நேரங்களில் தவறவிட்டு செல்வதுண்டு. அப்படி தொலைந்த பொருட்கள் நம்மிடம் வந்து சேரும்போது அது தரும் மகிழ்ச்சி விவரிக்க முடியாதது. அப்படி இங்கும் ஒரு ஆட்டோ டிரைவர் பயணி ஒருவர் தவற விட்ட ஏர்பாடை அவரிடமே பத்திரமாக திருப்பி கொடுத்துள்ளார்.
ஷிதிகா என்ற பெண் வேலைக்கு சென்றபோது ஆட்டோவில் சென்றுள்ளார். அப்போது அவர் தன் இயர்ஃபோனை தவறுதலாக ஆட்டோவில் விட்டு சென்றுவிட்டார்.
மிகவும் விலையுயர்ந்த பொருளான ஏர்பாட் தொலைந்ததால் அவர் வருத்தமடைந்துள்ளார். ஆனால், அதை தவறவிட்ட அரை மணி நேரத்திற்குள் அவர் பணியாற்றும் அலுவலகத்தின் பாதுகாவலர் அதனை அவரிடம் திரும்ப கொடுத்துள்ளார். எப்படி உங்களிடம் இது வந்தது எனக் கேட்டப்போது, ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் வந்து கொடுத்தாக அவர் தெரிவித்துள்ளார்.
சரி அந்த ஆட்டோ ஓட்டுநர் எப்படி சரியாக ஷிதிகாவின் அலுவலகத்தை கண்டுபிடித்து ஏர்பாடை கொடுத்தார்?
ஆட்டோவில் கிடந்த ஏர்பாடை பார்த்த ஓட்டுநர், அது யாருடையது என கண்டறிந்து திருப்பி கொடுக்க முடிவு செய்துள்ளார். அப்போது அதை ஆன் செய்து, தன் மொபைலுடன் இணைத்து, யாருடைய பெயரை காண்பிக்கிறது என்று பார்த்துள்ளார்.
அதில் ஷிதிகாவின் பெயர் வந்துள்ளது. பின்னர், ஷிதிகா பயணக்கட்டணம் செலுத்த ஃபோன் பே பயன்படுத்தியதாக தெரிகிறது. அதை வைத்து ஷிதிகாவின் அலுவலக முகவரியை சேகரித்துள்ளார். இதை ஷிதிகா ட்விட்டரில் பகிர்ந்தார்.
இந்த சம்பவம் பலரது கவனத்தை பெற்றது. ட்விட்டர்வாசிகள் அந்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust