பில் கேட்ஸின் உண்மையான பெயர் இதுவா? இணையத்தில் வைரலாகும் 48 ஆண்டு பழைய Resume

பில் கேட்ஸ் தனது Resume - யை LinkedIn என்ற தளத்தில் பகிர்ந்துள்ளார். 1974ல், இவர் தயார் செய்த இந்த ரெஸ்யூம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதிலும் முக்கியமாக இவரின் பெயர் வில்லியம் H கேட்ஸ் என்று குறிப்பிட்டுள்ளது, இன்னும் கொஞ்சம் கவனத்தை ஈர்த்துள்ளது.
Bill Gates
Bill Gates Twitter
Published on

1974ல் தான் பயன்படுத்திய resume-யை உலக பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் பகிர்ந்துள்ளார்.

அந்த resumeல் அவரது பெயர் வில்லியம் H கேட்ஸ் என்று அவர் குறிப்பிட்டிருப்பதால், இணையவாசிகள் பலரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.


பில் கேட்ஸ் உலகின் பணக்காரர்கள் பட்டியலில் நான்காம் இடத்தில் இருப்பவர். இவர் தனது சிறுவயது நண்பரான பால் அல்லனுடன் சேர்ந்து மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை நிறுவினார். இவர் அதன் தலைமை கணிப்பொறி மென்பொருள் வல்லுநராகவும் (CSA), முதன்மை செயல் அதிகாரியாகவும் (CEO) பணியாற்றியுள்ளார்.

பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் அறிக்கைப்படி, 1995லிருந்து, 2017 வரை இவர் தான்,உலக பணக்காரர் பட்டியலில் முதல் இடத்திலிருந்து வந்தார். 2017ல் அமேசான் நிறுவனத்தின் ஜெஃப் பெஸாஸ் அந்த இடத்திற்கு வந்தார். ஜூன் 2022 அறிக்கைப்படி பில் கேட்ஸ் தற்போது உலகின் 4வது பணக்காரர்.


படித்து முடித்து வேலை தேடுபவர்களானாலும் சரி, வேலையில் இருப்பவர்களானாலும் சரி, நமக்கு Resume என்பது மிக முக்கியமான ஒன்று. அதில் தான் நாம் நமக்கு என்னவெல்லாம் தெரியும், கற்றுக்கொண்டுள்ளோம் போன்ற விஷயங்களை சேகரித்து வைத்திருப்போம்.

நம்மை ஒரு நிறுவனம் ஏன் வேலைக்கு எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதற்கு ஒரு முக்கிய அம்சமாக இந்த ரெஸ்யூம் செயல்படும்.


சரி இப்போது பில் கேட்ஸுக்கும் ரெஸ்யூம் பற்றிய இந்த விளக்கத்துக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா?

பில் கேட்ஸ் தனது Resume - யை LinkedIn என்ற தளத்தில் பகிர்ந்துள்ளார். 1974ல், இவர் தயார் செய்த இந்த ரெஸ்யூம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அதிலும் முக்கியமாக இவரின் பெயர் வில்லியம் H கேட்ஸ் என்று குறிப்பிட்டுள்ளது, இன்னும் கொஞ்சம் கவனத்தை ஈர்த்துள்ளது.


"நீங்கள் சமீபத்தில் பட்டப்படிப்பு முடித்தவராய் இருந்தாலும் சரி, அல்லது காலேஜ் டிராப் அவுட்டாக இருந்தாலும் சரி. நிச்சயம் உங்கள் Resume என்னுடையதை விட சிறந்ததாகவே இருக்கும் என்று நம்புகிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.

இந்த Resume ஐ தயார் செய்யும் போது அவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தார். மேலும் அந்த ரெஸ்யூமில் தான் ஒரு சிஸ்டம் அனலிஸ்ட்டாகவோ, அல்லது சிஸ்டம் பிரோகிராமராகவோ ஆக விரும்புவதாக குறிப்பிட்டிருந்தார்.

மேலும் தனது உயரம், எடை, மற்றும் அவர் அதுவரை கற்றுக்கொண்ட கோர்ஸ்கள், கிடைத்த அனுபவங்கள் பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த நெட்டிசன்கள், 48 வருடத்திற்கு முன் தயார் செய்யப்பட்ட Resume ஆக இருந்தாலும், சிறந்ததாகவே காட்சியளிக்கிறது என்று குறிப்பிட்டிருந்தனர்.

மற்றொருவரோ, "உங்கள் பெயர் வில்லியமா? “ என்று கேள்வி எழுப்பியிருந்தார். தற்போது அந்த பதிவு வைரலாகி வருகிறது

Bill Gates
பில் கேட்ஸ், மார்க் ஜூகர்பெர்க் சொத்துகள் இரண்டு மடங்கு அதிகரிப்பு - விரிவான தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com