இந்த ஐஸ்க்ரீம் உருகவே உருகாதாம்: சீனா நிறுவனத்தின் அடேங்கப்பா முயற்சி - அட்டகாச தகவல்

அந்த நிறுவனம் வெளியிட்ட வீடியோவில், இவர்கள் தயாரித்த ஐஸ்கிரீம் மீது 31 டிகிரி வெப்பநிலையில் நெருப்பை காட்டியபோதும், உருகாமலிருந்தது. இந்த வீடியோ சீனாவில் வைரலாகியுள்ளது.
Ice Cream
Ice CreamPexels
Published on

கோடைக்காலம் வந்தால் தான் ஐஸ்க்ரீம் என்றிருந்த காலம் போய், எப்போது வெண்டுமானாலும் ஐஸ்க்ரீம் சாப்பிடலாம் என்று இப்போது மாறிவிட்டது.

ஐஸ்க்ரீமை பலவிதமாக நாம் ரசித்து உண்போம். சிலருக்கோ அது உருகி வழியும் முன் சாப்பிட்டுவிடவேண்டும். சிலர் அது உருகி கூழாக மாறிய பின் பருகுவார்கள். இப்படியிருக்க, சீனாவில் ஒரு ஐஸ்க்ரீம் தயாரிக்கும் பிராண்ட் உருகாத ஐஸ் க்ரீமை ஒன்றை தயாரித்துள்ளது. ஆம்! இது என்ன செய்தாலும் உருகாதாம்.

சைய்ஸ்கிரீம் (Chicecream) எனப்படும் ஐஸ்கிரீம் நிறுவனம் தான் இதை தயாரித்துள்ளது. இந்த ஐஸ்கிரீம் மீது நெருப்பை காட்டிய போதும் அது உருகாமல் இருக்கும் வீடியோ இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.


பீஜிங்கை சார்ந்த இந்த நிறுவனம், நெருப்பால் சுட்டாலும் உருகாத "ஐஸ்கிரீம்களின் ஹேர்ம்ஸ்" என்ற தலைப்பிட்ட வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவிட்டு மக்களின் ஈர்ப்பை வெகுவாக கவர்ந்துள்ளது.

அந்த நிறுவனம் வெளியிட்ட வீடியோவில், இவர்கள் தயாரித்த ஐஸ்கிரீம் மீது 31 டிகிரி வெப்பநிலையில் நெருப்பை காட்டியபோதும், உருகாமலிருந்தது. இந்த வீடியோ சீனாவில் வைரலாகியுள்ளது.

ஒரு புறம் இது மக்களின் கவனத்தை ஈர்த்தாலும், இன்னொரு பக்கம் மக்களிடையே இதில் அதிக படியான ரசாயனங்கள் சேர்க்கப்பட்டிருக்கும் என்றும், இதன் விலை நிச்சயம் அதிகமாகத்தான் இருக்கும் என்றும் சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.

மக்களின் இக்கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் இந்த நிறுவனம் இதன் விலை மற்றும் அதில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களை பற்றி விளக்கமளித்துள்ளது.

இதன் விலை 66 சீன யுவான். அதாவது இந்திய ரூபாயின் மதிப்பின் படி ரூ.780 என்று தெரிவித்துள்ளது. மேலும் இதில் சேர்க்கப்பட்டிருக்கும் மூலப்பொருட்கள் அனைத்தும் சீனாவின் தேசிய உணவு பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டவையே என்றும் அந்நாட்டின் சமூக வலைத்தளமான Weibo வில் தெரிவித்துள்ளது. அந்நிறுவனம் பதிவிட்ட இந்த பதிவுக்கு 1.6 லட்சம் பேர் லைக் செய்து உள்ளனர்.

AFP நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், இதில் சேர்க்கப்பட்டுள்ள பதப்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும் பெரும்பாலும் அனைத்து ஐஸ்கிரீம் நிறுவனங்களில் பயன்படுத்துவது தான். அதனால் இதில் பாதிப்புகள் இருக்காது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் சீனாவின் மூத்த தேசிய உணவு பாதுகாப்பு ஆய்வாளர் Wang Silu இந்த ஐஸ்கிரீமை தயாரிக்க பயன்படுத்தும் மூலப் பொருட்களும் பாதுகாப்பானது தான் என்று தெரிவித்துள்ளார்.


இந்த நிறுவனம் தன்னை Magnum, Haagen-Dazs போன்ற நிறுவனங்களின் சீன மாற்று நிறுவனம் என்று கூறியுள்ளது. அதாவது, இயற்கையான மற்றும் உள்நாட்டில் கிடைக்கும் மூல பொருட்களைக் கொண்டு இவர்கள் ஐஸ்கிரீம் தயாரிப்பதாக குறிப்பிட்டிருந்தனர்.

Ice Cream
சோடா வியாபாரி டூ 650 கோடி ரூபாய் ஐஸ் கிரீம் சாம்ராஜ்ஜியம் - வாடிலாலின் வியக்க வைக்கும் கதை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com