Jadeja: CSK விலிருந்து விலகுகிறாரா ஜடேஜா? - ஆகாஷ் சோப்ரா கூறுவது என்ன?

காயம் காரணமாக அடுத்து நடக்கவிருக்கும் மூன்று லீக் போட்டிகளிலிருந்தும் சிஎஸ்கே-வின் ஆல் ரவுன்டர் ஜடேஜா விலகியுள்ள நிலையில், அடுத்த ஆண்டும் அவர் அணியில் இடம்பெறுவது சந்தேகம் தான் என்பது போல கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Ravindra Jadeja
Ravindra JadejaTwitter
Published on

கடந்த சென்னை-பெங்களூரு இடையே நடந்த போட்டியில் ஃபீல்டிங் செய்த போது காயம் ஏற்பட்டதால் நடக்கவிருக்கும் மற்ற மூன்று போட்டிகளிலிருந்தும் ரவீந்திர ஜடேஜா விலகுவதாக சென்னை அணியின் நிர்வாகம் அறிவித்திருந்தது.

நடப்பாண்டில் சிஎஸ்கே-வின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ஜடேஜா, இரண்டு போட்டிகளில் மட்டுமே வென்றது அதிருப்தியை ஏற்படுத்தியது. அத்துடன், அவரது தனிபட்ட ஆட்டமும் சிறப்பாக இல்லை. ஜடேஜா அவரது விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேப்டன்சி மீண்டும் தோனியிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை அணி, பெங்களூரு அணிக்கு எதிராக விளையாடிய ஆட்டத்தில், ஃபீல்டிங் செய்தபோது பந்தை பிடிக்கும் முயற்சியில் கீழே விழுந்து, அவரது விலாவில் காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால், டெல்லி அணியுடனான ஆடத்தில் அவர் பங்கேற்கவில்லை. அதனை தொடர்ந்து, காயத்தினால் மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் அவர் பங்கு கொள்ளமாட்டார் என்று அணி நிர்வாகம் கூறியிருந்தது.

Jadeja-MS Dhoni
Jadeja-MS DhoniTwitter
Ravindra Jadeja
IPL 2022 : மும்பையின் மரண அடியில் சென்னையின் கனவு தகர்ந்தது | CSK vs MI

இந்த செய்திகளை தொடர்ந்து அடுத்த ஆண்டு நடக்கும் ஐபிஎல் போட்டிகளிலும் இவர் பங்கேற்கமாட்டார் என்ற கூற்றுகள் பரவலாக கூறப்பட்டு வருகிறது. முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா இதை முன்பு நடந்த சம்பவத்தோடு தான் ஒப்பிட்டு கூறுவதாகவும் தெரிவித்திருந்தார்.

"சுரேஷ் ரெய்னா சென்னைக்காக விளையாடி வந்தார். பின் அது திடீரென முடிவுக்கு வந்தது. இது சிஎஸ்கே கேம்ப்பில் அடிக்கடி நிகழும் ஒரு விஷயமாக உள்ளது" என்றார். அணி நிர்வாகம் காரணங்கள் எதுவும் இல்லாமல் ஒரு வீரருடனான தொடர்பை துண்டித்துக்கொள்வது புதியதாக தோன்றவில்லை என்றும் குறிப்பிட்டார்.

Jadeja
JadejaTwitter
Ravindra Jadeja
Dhoni : "Play-off போகலைன்னா உலகம் அழிஞ்சிடாது" வெற்றி குறித்து தோனி கூறியது என்ன?

சிஎஸ்கேவின் இன்ஸ்டாகிராம் பக்கம் ஜடேஜாவை அன்ஃபாலோ (unfollow) செய்துவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்துக்கொண்டிருக்கும் வேளையில், இது ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மைக்கேல் வானும் இதுபோன்ற கருத்தையே பதிவுசெய்துள்ள நிலையில், அணியின் நிர்வாகமும், ஜடேஜாவும் தங்கள் மௌனங்களை உடைத்தால் உண்மை வெளிச்சத்திற்கு வரலாம்.

Ravindra Jadeja
IPL -ல் இருந்து விலகும் ஜடேஜா - காரணம் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com