வாழ்நாள் சம்பளத்தை ஒரே தவணையில் அனுப்பிய நிறுவனம் - ராஜினாமா செய்துவிட்டு தலைமறைவான ஊழியர்

சிலியைச் சேர்ந்த ஒரு ஊழியருக்கு அவருடைய சம்பளத்தை விட 286 மடங்கு பணம் தவறுதலாக அனுப்பப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்வு நடந்த பிறகு, அவர் வேலையை ராஜினாமாவும் செய்திருக்கிறார். சில நாட்களில் அவர் காணாமல் போயிருக்கிறார்.
Salary
SalaryCanva
Published on

ஒருநாள் உங்கள் தொலைப்பேசிக்கு ஒரு குறுந்தகவல் வருகிறது. அந்த குறுந்தகவலில், நீங்கள் பணிபுரிகிற நிறுவனத்திடம் இருந்து உங்கள் வங்கிக் கணக்கிற்கு கோடிக் கணக்கான ரூபாய் சம்பளமாகச் செலுத்தப்பட்டிருக்கிறது என்று இருந்தால், எப்படி இருக்கும்?. இப்படி ஒரு சம்பவத்தை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?

நிச்சயமாக, நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள் தான். பிறகு நிதானமாக அந்த தகவலைத் திரும்பவும் படித்துப் பார்க்கிறீர்கள், கண்டிப்பாக அவ்வளவு பெரிய தொகை செலுத்தப்பட்டிருப்பதை உறுதி செய்கிறீர்கள். இப்போது என்ன செய்வீர்கள்?. என்ன செய்வீர்களோ! ஆனால், சிலி நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு உண்மையிலேயே இப்படி நிகழ்ந்து, அவர் செய்த காரியம் என்ன தெரியுமா?

சிலியைச் சேர்ந்த ஒரு ஊழியருக்கு அவருடைய சம்பளத்தை விட 286 மடங்கு பணம் தவறுதலாக அனுப்பப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்வு நடந்த பிறகு, அந்த ஊழியர் நிறுவனத்திடம் அதிகமாகச் செலுத்தப்பட்ட தொகையினை திருப்பி அனுப்பி விடுவதாக உறுதியளித்து விட்டு, தன்னுடைய வேலையை ராஜினாமாவும் செய்திருக்கிறார். ஆனால் சில நாட்களில் அவர் காணாமல் போயிருக்கிறார்.

இந்த சம்பவமானது, சிலி உணவு தொழில்துறை கூட்டமைப்பின் (Cial) மனித வள பகுதியில் நடந்தது. இது சான் ஜார்ஜ், லா ப்ரிஃபெரிடா மற்றும் வின்டர் போன்ற முக்கியமான சிலி பிராண்டுகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிறுவனம் ஆகும். இது சிலியில் உள்ள மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாகும்.

Salary
உங்கள் கணவரை கொலை செய்வது எப்படி? : கட்டுரை எழுதிய நாவலாசிரியர் கைது - இதுதான் காரணம்
Millionaire (Representational)
Millionaire (Representational)Canva

வழக்கம்போல ஊழியர்களின் வங்கிகணக்குக்குச் சம்பளத்தை மாற்றும் போது, தவறுதலாக ஏற்பட்ட பிழையால் அந்த ஊழியருக்கு, 165,398,851 சிலி பெசோக்களை (ரூ. 1.42 கோடி) செலுத்தப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மே 30 அன்று, நிறுவனத்தின் ஊழியர்களில் ஒருவர் விநியோக மையத்தின் துணை மேலாளரை அணுகி, அவருக்கு மே மாதத்திற்கான ஊதியம் வழங்குவதில் தவறு நடந்திருப்பதாகக் கூறி இருக்கிறார். அப்போது அவரது சம்பளத்தை விட 165.3 மில்லியன் பெசோக்களை அந்நிறுவனம் அவருக்கு மாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. சிலியில் Cial என்ற பெயரில் "வவுச்சரை" உருவாக்க வங்கிக்குச் செல்ல வேண்டும் என்று ஊழியரிடம் கூறி இருக்கிறார்கள்.

Salary
Bye Bye Sir முதல் Enough is Enough வரை : இணையத்தில் வைரலான நேர்மையான 6 ராஜினாமா கடிதங்கள்

அந்த ஊழியரும், வங்கிக்குச் சென்று 165 மில்லியனுக்கு CIAL பெயரில் வவுச்சரை உருவாக்கச் சம்மதித்துச் சென்றிருக்கிறார். ஆனால் அதன் பிறகு நிறுவனத்தால் அவரை தொடர்பு கொள்ள முடியாமல் போயிருக்கிறது. நாட்கள் நகர்ந்த பின்னும், வங்கியிடமிருந்தும் நிறுவனத்திற்கு எந்த தகவலும் வரவில்லை.

சில நாட்கள் கழித்து, கடந்த ஜூன் 2ஆம் தேதி அவர் தனது வழக்கறிஞருடன் வந்து ராஜினாமா கடிதத்தை அளித்துவிட்டு தற்போது தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. இப்போது அந்நிறுவனம் அந்த நபருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. சட்டத்திற்குப் புறம்பாகப் பரிவர்த்தனைகள் மேற்கொள்வது சிலி அரசியலமைப்பில் கடுமையான தண்டனைக்குரிய குற்றம், என்பது குறிப்பிடத்தக்கது.

Salary
கணவரை வாடகைக்கு விட்டு சம்பாதிக்கும் மனைவி - என்ன, எங்கே, எப்படி?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com