பை பை 'இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்'- முடிவுற்றது 27 வருட ராஜ்ஜியம்

கடந்த 27 வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வந்த இன்டெர்நெட் எக்ஸ்ப்ளோரரின் சேவையை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஜூன் 15 ஆம் தேதியொடு நிறுத்தியது. இதற்கு பதிலாக, மைக்ரோசாஃப்ட் எட்ஜை பயன்படுத்த வாடிக்கையாளர்களிடம் கூறி வருகிறது மைக்ரோசாஃப்ட்
இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்
இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்canva
Published on

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின பிரவுசரான இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் (Internet Explorer) கடந்த 2022 ஜூன் 15 புதன்கிழமையன்று தன் செயல்பாட்டை நிறுத்திக் கொண்டது.


இன்றைய 2k கிட்ஸ்களுக்கு இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ஒரு மொக்கை பிரவுசராக, கடும் விமர்சனத்துக்கு உரிய, வசதிகளற்ற பிரவுசராகத் தோன்றலாம்.

ஆனால் 21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகில் உள்ள இணைய பயனர்களில் சுமார் 90 சதவீதம் பேர் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பிரவுசரைத்தான் விரும்பிப் பயன்படுத்தித்தினர்.

நேற்றுடன் தன் சேவையை நிறுத்திக் கொண்ட இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், டெக் உலகில் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த பிளாக்பெரி செல்போன்கள், டயல் அப் மோடம், பாம் பைலட். போன்றவைகளின் வரிசையில் இணைந்திருக்கிறது.

Windows 98
Windows 98canva

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் தன் சேவையை நிறுத்திக் கொள்ளும் என சுமார் ஓராண்டு காலத்துக்கு முன்பே மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வெளிப்படையாக அறிவித்தது. பிரவுசர் சந்தையில் இன்னும் வலுவாக தன் கால் தடத்தை பதிக்க இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பயனாளர்கள் உட்பட பலரையும் மைக்ரோசாப்ட் எட்ஜ் பிரவுசர் மூலம் ஈர்க்க திட்டமிட்டுள்ளது.

இப்போதே இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பயனர்கள் நேரடியாக மைக்ரோசாஃப்ட் எட்ஜ் தளத்துக்கு திசைதிருப்பப்படுவர் என்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவன தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தொழில்நுட்ப உலகத்தில் கொடிகட்டி பறந்து கொண்டிருந்த இன்டர்நெட் எக்ஸ்ப்ளரர் பிரவுசருக்கு என்ன ஆனது? ஏன் தன் சந்தையை மற்ற பிரவுசர்களிடம் இழக்க நேரிட்டது? வாருங்கள் பார்ப்போம்.

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்
கூகுள் நிறுவனம் எப்படி பணம் ஈட்டுகிறது தெரியுமா? - இந்தக் கட்டுரையை படியுங்கள்!

கடந்த 1995ஆம் ஆண்டு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் முதல் பதிப்பு வெளியானது. அப்போது நெட்ஸ்கேப் நேவிகேட்டர் தான் இணைய உலகத்தில் மிகப் பிரபலமாக இருந்தது. நேவிகேட்டரை வீழ்த்தி தான் இன்டர்நெட் எக்ஸ்ப்ளரர், இணைய உலகில் அதிக மக்கள் பயன்படுத்தும் பிரவுசராக முதலிடத்தை பிடித்தது.

உலக அளவில் மைக்ரோசாப்டின் விண்டோஸ் மென்பொருள் மிக மிகப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது.


விண்டோஸ் பயன்படுத்தப்படும் கணிப்பொறிகளில் தன்னிச்சையாகவே இன்டர்நெட் எக்ஸ்பிளோரர் பிரவுசர் பயன்படுத்தப்படும் வகையில் செட்டிங்ஸ் அமைக்கப்பட்டிருந்தது. இதுவும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பிரபலமாக ஒரு முக்கிய காரணமாக இருந்தது.

மைக்ரோசாஃப்ட்
மைக்ரோசாஃப்ட் canva

விண்டோஸ் மென்பொருளோடு இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பிரவுசரை இணைத்தது பல்வேறு அரசு அமைப்புகள் மற்றும் பொதுமக்களை முகம் சுழிக்க வைத்தது. கூகுள் குரோம், மொசில்லா ஃபயர்ஃபாக்ஸ், ஒபெரா போன்ற பிரவுசர்களோடு ஒப்பிடும்போது இன்டர்நெட் எக்ஸ்பிளோரர் பிரவுசருக்கு விண்டோஸ் ஒரு மிகப்பெரிய பலமாக நியாயமற்ற வழியில் நன்மை பயக்கும் ஒன்றாக இருந்தது.


காலப்போக்கில் இணையத்தின் வேகத்திற்கு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரால் ஈடுகொடுக்க முடியவில்லை. இன்டர்நெட் எக்ஸ்ப்ளரர் தொடர்ந்து தரவுகளைக் கொண்டு வந்து கொட்டும் ஒரு பிரவுசர் ஆகவே தொடர்ந்தது.

மைக்ரோசாஃப்ட் எட்ஜ்
மைக்ரோசாஃப்ட் எட்ஜ்canva

ஆனால் கூகுள் போன்ற இணையத்தை மையமாக வைத்து செயல்படும் பெருநிறுவனங்கள் பிரவுசிங் என்பதை ஒரு அனுபவமாக பார்த்தது. ஒருவர் ஒரு பிரவுசருக்குள் நுழைந்து தங்களுக்குத் தேவையான விஷயங்களை எல்லாம் செய்து முடித்து வெளியேறுவதை மனதில் வைத்து, எத்தனை சுலபமாக எத்தனை இலகுவாக கட்டமைக்க வேண்டுமோ அதனைத் தொடர்ந்து செய்து வந்தது.


அதோடு இணைய பாதுகாப்பு போன்ற விஷயங்களிலும் கூடுதல் கவனத்தைச் செலுத்தின.


மறுபக்கம் இன்டர்நெட் எக்ஸ்ப்ளரர் 90ஸ் கிட்ஸ்களின் பொறுமையையே சோதிக்கும் அளவிற்கு மந்தமாக செயல்பட்டது.

அதுபோக சகட்டுமேனிக்கு புரோகிராம்கள், வலைதளங்கள் கிராஷ் ஆவது போன்ற புகார்கள் எழுந்தன. இதற்குமேல் முத்தாய்ப்பாக மற்ற பிரவுசர்களோடு ஒப்பிடும்போது எளிதில் ஹேக் செய்யப்பட கூடியதாகவும் இருந்ததாக பல்வேறு வலைத்தளங்களில் செய்தி வரும் அளவுக்கு தரத்தில் கோட்டை விட்டிருந்தது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்.

மைக்ரோசாஃப்ட் எட்ஜ்
மைக்ரோசாஃப்ட் எட்ஜ்canva

இணையத்தை வெறும் தகவல்களுக்காக பயன்படுத்துவதை தாண்டி, சமூக வலைதளங்கள், பொழுதுபோக்கு, விளையாட்டு என பல விஷயங்களுக்காக பயன்படுத்த தொடங்கிய 90 கிட்ஸ் மற்றும் 2K கிட்ஸ்களுக்கு இன்டர்நெட் எக்ஸ்பிளோரர் சுத்தமாக ஒத்துவராத பிரவுசராக தொடர்ந்தது.

இப்போது கூட எத்தனை 2K கிட்ஸ்கள் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பிரவுசரை ஒரு முறையாவது திறந்து பார்த்திருப்பார்கள் என்று தெரியவில்லை.


இன்று உலக அளவில் கூகுள் குரோம் சுமார் 65 சதவீத பயனர்களை தன் வசம் வைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனத்தின் சஃபாரி பிரவுசர் சுமார் 19 சதவீத பயனர்களை வைத்துள்ளது.

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு பதிலாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம், மைக்ரோசாஃப்ட் எட்ஜ் பிரவுசரைக் கொண்டு வர விரும்புகிறது. எட்ஜ் பிரவுசரை உலக அளவில் சுமார் 4 சதவீதம் பேர் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.

Internet Explorer retires
Internet Explorer retirescanva

'ஊரோடு ஒத்துப் போ... இல்ல வேரோடு செத்துப்போ' என தமிழ்நாட்டு கிராமப்புறங்களில் உள்ள மூப்பர்கள் ஒரு பழமொழி கூறுவர்.

அது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானாக வலம் வரும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்கு கச்சிதமாகப் பொருந்துகிறது.

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்
மதுரை: ஊழியர்களுக்கு இலவச இணை தேடும் சேவை - IT நிறுவனத்தின் புதிய முயற்சி!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com