'வைன் ஏரி' என்பது என்ன?மதுபானத்தை அழிக்க ரூ.1780 கோடி செலவு செய்யும் பிரான்ஸ் அரசு!

உலகின் வைன் தலைநகரமாக அறியப்படும் போர்டாக்ஸ் (Bordeaux) நகரம் பிரான்ஸில் தான் இருக்கிறது. இப்போது பிரான்ஸ் மக்கள் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்கொள்வதனால் வைன் வியாபாரம் சரிவைக் கண்டுள்ளது.
'வைன் ஏரி' என்பது என்ன?மதுபானத்தை அழிக்க ரூ.1780 கோடி செலவு செய்யும் அரசு!
'வைன் ஏரி' என்பது என்ன?மதுபானத்தை அழிக்க ரூ.1780 கோடி செலவு செய்யும் அரசு!Twitter
Published on

உலகிலேயே அதிகமாக வைன் தயாரிக்கப்படுவது ஐரோப்பாவில் தான். பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் தயாரிக்கப்படும் வைன் தனிச் சிறப்பு பெற்றது.

உலகின் வைன் தலைநகரமாக அறியப்படும் போர்டாக்ஸ் (Bordeaux) நகரம் பிரான்ஸில் தான் இருக்கிறது. ஆனால் இப்போது அந்த நகரத்திலும் பிற வைன் தயாரிக்கும் பகுதிகளிலும் இருக்கும் வைன்களை அழிக்க 200 மில்லியன் யூரோ தொகையை ஒதுக்கியுள்ளது.

இந்திய மதிப்பில் இது 1780 கோடி ரூபாய். இவ்வளவு பெரிய தொகை ஒதுக்கப்படும் அளவுக்கு பெரிய பிரச்னையில் இருக்கிறது பிரான்ஸின் வைன் வணிகம்.

கோவிட் பெருந்தோற்றில் சுற்றுலாப்பயணிகள் வருகை குறைந்ததால் வைன் வணிகம் பெரும் பாதிப்பை சந்தித்தது. இப்போது பிரான்ஸ் மக்கள் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்கொள்வதனால் வைன் வியாபாரம் சரிவைக் கண்டுள்ளது.

மேலும் மக்கள் வைனுக்கு மாற்றாக பீர், வோட்கா போன்ற மதுபானங்களுக்கு மாறியதன் விளைவாகவும் வைன் வணிகம் சரிந்துள்ளது.

Wine
WineCanva


இதனால் தேவையை விட அதிகமான வைனை தயாரித்துவிட்டனர். உற்பத்தியாளர்கள், விவசாயிகள் மற்றும் விற்பனையாளர்கள் என பலதரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளன. வைன் விலையானது உற்பத்தி செலவைவிட குறைந்துவிட்டது.

அளவுக்கு அதிகமாக இருக்கும் வைன்களை அழிப்பதன் மூலம் மீண்டும் வைன் விலையை ஏற்றி வணிகத்தை சரி செய்ய அரசு பெரும் தொகையை ஒதுக்கியிருக்கிறது.

'வைன் ஏரி' என்பது என்ன?மதுபானத்தை அழிக்க ரூ.1780 கோடி செலவு செய்யும் அரசு!
Diet Coke, Pepsi குடிப்பதால் புற்றுநோய் வருமா? - உலக சுகாதார மையம் சொல்வதென்ன?

மேலும் விவசாயிகள் திராட்சைக்கு பதிலாக ஆலிவ் போன்ற பயிர்களை உற்பத்தி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அளவுக்கு அதிகமாக இருக்கும் வைன் வீணாக்கப்படாது. உணவுப் பொருட்கள் அல்லாத சானிடைசர்கள், துப்புரவு பொருட்கள் மற்றும் வாசனை திரவியங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.

இதேப்போல 2000களிலும் வைன் ஏரி என்ற பிரச்னை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

'வைன் ஏரி' என்பது என்ன?மதுபானத்தை அழிக்க ரூ.1780 கோடி செலவு செய்யும் அரசு!
கூர்க் : கர்நாடகாவில் ஒரு Wine Hub - வீட்டிலேயே தயார் செய்யப்படும் வைன் பற்றி தெரியுமா?

எல்லாவற்றையும் கடந்து வைன் துறையில் 27 ஐரோப்பிய யூனியன் நாடுகளும் ஆண்டுதோறும் 1.06 பில்லியன் யூரோ தொகையை முதலீடு செய்து வருகின்றன.

மக்களிடம் பணப்புழக்கம் திரும்பும் போது மட்டுமே வைன் போன்ற அத்தியாவசியமற்ற பொருட்களுக்கான சந்தை வலுபெறும்.

'வைன் ஏரி' என்பது என்ன?மதுபானத்தை அழிக்க ரூ.1780 கோடி செலவு செய்யும் அரசு!
உலக அதிசயமான ஈபிள் டவர் கட்டப்பட்டது எதற்காக? ஆரம்பத்தில் பாரிஸ் மக்கள் அதை வெறுத்தது ஏன்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com